← Back

Veedu Manaivi Makkal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Veedu manaivi makkal Moondrum vaazhvil sikkal Karppanai kalainthathadaa Kanavugal mudinthathadaa Vidhaippavan manithanadaa Aruppavan oruvanadaa…. Male : Veedu manaivi makkal….. Male : Aayirang kaalaththu payirondru Indru aruvadai aanathu Vidhaiththavan vaazhkkai Kanneeril neeraaduthu Male : Udhiraththil pirantha kuruvigalellaam Uravai maranthathu Sontham intha veettil Kadal meedhu mazhaiyaanathu Male : Oviyam vaangi vanthaan Kangalai kaanavillai Throndru vaangi vanthaan Paadhaiyai kaanavillai Poojaigal seiyaa vanthaan Than koyilai kaanavillai Male : Veedu manaivi makkal….. Veedu manaivi makkal….. Male : Kooraikku vangiya moongilil indru Kolliyaa vaippathu Thottu mattum vaiththaen Vaerenna nee kandathu Male : Thookkaththil paadhi yaekkaththil paadhi Vaazhkkaithaan ponathu Yaezhaiyin sontham eppothum thappaanathu Male : Kodondru mudiyum munnae Kuruvi paranthathadaa Kuruvi paranthathanaal koodum sarinthathadaa Pallavi thodangum munnae Un saranam mudinthathadaa…. Male : Veedu manaivi makkal Moondrum vaazhvil sikkal Karppanai kalainthathadaa Kanavugal mudinthathadaa Vidhaippavan manithanadaa Aruppavan oruvanadaa…. Male : Veedu manaivi makkal….. Veedu manaivi makkal…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல் கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதனடா அறுப்பவன் ஒருவனடா… ஆண் : வீடு மனைவி மக்கள்….. ஆண் : ஆயிரங் காலத்து பயிரொன்று இன்று அறுவடை ஆனது விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது ஆண் : உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம் உறவை மறந்தது சொந்தம் இந்த வீட்டில் கடல் மீது மழையானது ஆண் : ஓவியம் வாங்கி வந்தான் கண்களை காணவில்லை தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை பூஜைகள் செய்ய வந்தான் தன் கோயிலைக் காணவில்லை ஆண் : வீடு மனைவி மக்கள்….. வீடு மனைவி மக்கள்….. ஆண் : கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று கொள்ளியா வைப்பது தொட்டு மட்டும் வைத்தேன் வேறென்ன நீ கண்டது ஆண் : தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி வாழ்க்கைத்தான் போனது ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது ஆண் : கூடொன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா பல்லவி தொடங்கும் முன்னே உன் சரணம் முடிந்ததடா…… ஆண் : வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல்……. கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதடா அறுப்பவன் ஒருவனடா… ஆண் : வீடு மனைவி மக்கள்…… வீடு மனைவி மக்கள்…..