← Back

Nadhi Karai Orathu Song Lyrics

Singers : K. J. Jesudass and S. P. Sailaja Music by : K. V. Mahadevan Lyrics by : Muthulingam Female : Nadhikarai oraththu nanalgalae En naayagan pugalai kelungalaen Kaalaiyil pooththa pushbangalae Engal kadhalai vaazhththi paadungalaen Male : Nadhikarai oraththu nanalgalae En naayagi azhagai parungalaen Kaalaiyil pooththa pushbangalae Engal kadhalai vaazhththi paadungalaen Female : Nadhikarai oraththu nanalgalae Male : En naayagi azhagai paarungalaen Male : Tharaiyai thodaatha thendralaipol Un thamarai padhangal nadappathenna Female : Kalyaana thaedhiyai kettavudan En kaalgal tharaiyai thodavillaiyae Male : Karaiyai thodaatha alaigalaipol Un karunguzhal kaigalil vizhuvathenna Female : Kadhalan kaiyinil sugam peravae En koondhal sarinthu vizhunthathaiyyaa Male : Nadhikarai oraththu nanalgalae Female : En naayagan pugalai kelungalaen Male : Gangaiyin sangamam kadalidaththil Intha kanniyin sangamam ennidaththil Female : Semman bhoomiyil neer polae En sinthai kalanthathu unnidaththil Male : Udhadugalaalae kadhai ezhuthi Ullaththai mayakkida naan varavaa Female : Maalaiyum melamum varum varaikkum Un manathai adakkavum mudiyaathaa Male : Nadhikarai oraththu nanalgalae En naayagi azhagai parungalaen Female : Kaalaiyil pooththa pushbangalae Engal kadhalai vaazhththi paadungalaen Both : ………………
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை கேளுங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே ஆண் : என் நாயகி அழகை பாருங்களேன் ஆண் : தரையைத் தொடாத தென்றலைப்போல் உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன பெண் : கல்யாண தேதியை கேட்டவுடன் என் கால்கள் தரையைத் தொடவில்லையே ஆண் : கரையைத்தொடாத அலைகளைப்போல் உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன பெண் : காதலன் கையினில் சுகம் பெறவே என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே பெண் : என் நாயகன் புகழை கேளுங்களேன் ஆண் : கங்கையின் சங்கமம் கடலிடத்தில் இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில் பெண் : செம்மண் பூமியில் நீர் போலே என் சிந்தை கலந்தது உன்னிடத்தில் ஆண் : உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா பெண் : மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை அடக்கவும் முடியாதா ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் பெண் : காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் இருவர் : ………………………