← Back

Innadu Nam Naadu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Auggath Male : Innaadu namm naadu Vizhundhu pochu vellaikkaaran valaiyilae Vandhaargal vendraargal Alaigal thavazhum madharaasin karaiyilae Male : Panpaadu ellaamae maaripochu Namma vaazhkai muraiyilae Vellaiyoo vellaiyae Kollaiyoo kollaiyae Thunbathai yaarumae sollavae illaiyae Male : Pudhu saalai vasathigal adainthom Thandavaala rayilgalai adainthom Minsaara vazhithadam adainthom adainthom Male : Em koottai kodi maram izhandhom Em kolgai manamadhai izhandhom Pon kodi selvangal izhandhom izhandhom Chorus : ………………….. Male : En vaanum mannum vanigamaai ponadhae Engal arumaiyum perumaiyum arasiyal aanadhae Male : Ezhai dhesam endraargalae Kozhai dhesam endraanadhae Velum vaalum yendhi vazhndha Inam viraiyaaga ponadhae Male : Sindhum vervai ingae ingae Selvam ellaam angae angae Kizhakkin maarbil kurudhi kudithu kondu Merkku valarkiragathae Male : Ada vellai nari singangalai aandathennavo Siru vetil koottam Engal koottai meindhadhennavoo Paarukkum oorukkum thangathai kodutha inam Parukkaikku alaivadhenna Male : Kadalgalin meenai mattum naam padithom Kadalaiyum karaiyaiyum avan pidithaan Karaigalil manidharkku valai virithaan Chennaiyil madharas cityai amaithaan Male : Em dhesam meendum theeviram kaanuma Engal adimaiyin thazhumbugal muzhumaiyaai maaruma Male : Paalum thaenum aaraaguma Paazhum kanneer aaraaguma Nammai naamae aazhum dhesam idhu Indru uyir peruma Male : Ooran aatchi oor ponadhum Oozhal oozhal oor aazhudhae Nammai naamae aazhum dhesamidhu Naalai valam peruma Male : Vanjagamum poimaigalum pogattumae Vaaimai enum thaaimai mannai aazhattumae Indhiya indhiya ezhundhu nimirnthadhendru Ivvulagam vaazhthattumae Male : Jana gana mana enum dhesakkuralae Janagalin kural endru olikattumae Saritharam perumaigal thirumbattumae Brittanum namadhu perumai pesumae Indhiya indhiya indhiya indhiya
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஆகத் ஆண் : இந்நாடு நம் நாடு விழுந்து போச்சு வெள்ளைக்காரன் வலையிலே வந்தார்கள் வென்றார்கள் அலைகள் தவழும் மதராசின் கரையிலே ஆண் : பண்பாடு எல்லாமே மாறிப்போச்சு நம்ம வாழ்க்கை முறையிலே வெள்ளையோ வெள்ளையே கொள்ளையோ கொள்ளையே துன்பத்தை யாருமே சொல்லவே இல்லையே ஆண் : புதுச் சாலை வசதிகள் அடைந்தோம் தண்டவாள ரயில்களை அடைந்தோம் மின்சார வழித்தடம் அடைந்தோம்…அடைந்தோம் ஆண் : எம் கோட்டைக் கொடி மரம் இழந்தோம் எம் கொள்கை மனமதை இழந்தோம் பொன் கோடி செல்வங்கள் இழந்தோம்…இழந்தோம் குழு : .…………………….. ஆண் : என் வானும் மண்ணும் வணிகமாய்ப் போனதே எங்கள் அருமையும் பெருமையும் அரசியல் ஆனதே ஆண் : ஏழை தேசம் என்றார்களே கோழை தேசம் என்றானதே வேலும் வாளும் ஏந்தி வாழ்ந்த இனம் விரையாகப் போனதே ஆண் : சிந்தும் வேர்வை இங்கே இங்கே செல்வம் எல்லாம் அங்கே அங்கே கிழக்கின் மார்பில் குருதி குடித்துக் கொண்டு மேற்கு வளர்கிறதே……. ஆண் : அட வெள்ளை நரி சிங்கங்களை ஆண்டதென்னவோ சிறு விட்டில் கூட்டம் எங்கள் காட்டை மேய்ந்ததென்னவோ பாருக்கும் ஊருக்கும் தங்கத்தைக் கொடுத்த இனம் பருக்கைக்கு அலைவதென்ன ஆண் : கடல்களின் மீனை மட்டும் நாம் பிடித்தோம் கடலையும் கரையையும் அவன் பிடித்தான் கரைகளில் மனிதர்க்கு வலை விரித்தான் சென்னையில் மதராஸ் சிட்டியை அமைத்தான் ஆண் : எம் தேசம் மீண்டும் தீவிரம் காணுமா எங்கள் அடிமையின் தழும்புகள் முழுமையாய் மாறுமா ஆண் : பாலும் தேனும் ஆறாகுமா பாழும் கண்ணீர் ஆறாகுமா நம்மை நாமே ஆளும் தேசமிது இன்று உயிர் பெறுமா ஆண் : ஊரான் ஆட்சி ஊர் போனதும் ஊழல் ஊழல் ஊர் ஆளுதே நம்மை நாமே ஆளும் தேசமிது நாளை வளம் பெறுமா ஆண் : வஞ்சகமும் பொய்மைகளும் போகட்டுமே வாய்மை எனும் தூய்மை மண்ணை ஆளட்டுமே இந்தியா இந்தியா எழுந்து நிமிர்ந்ததென்று இவ்வுலகம் வாழ்த்தட்டுமே ஆண் : ஜன கண மண எனும் தேசக்குரலே ஜனங்களின் குரல் என்று ஒலிக்கட்டுமே சரித்திரம் பெருமைகள் திரும்பட்டுமே பிரிட்டன்னும் நமது பெருமை பேசுமே ஆண் : இந்தியா இந்தியா இந்தியா இந்தியா