← Back

Selai Virkkum Kadai Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga Selai virkum kadaiyai kandean theru theruvaaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga Female : Paalai virkkum pennai kandaen pattikkaattilae Paalai virkkum pennai kandaen pattikkaattilae Than paruvam virkkum pennai kandaen pattanaththilae…. Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga Female : Ozhukkamendru siruvayathil paadam padiththaal Ival oruvanukkae oruththiyendru vedham padiththaal Vazhukkividum bhoomiyilae vanthu piranthaal Intha vanchamillaa paavimagal vazhukki vizhunthaal Intha vanchamillaa paavimagal vazhukki vizhunthaal Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga Female : Nallavelai kannakkikku penmagal illai Antha naalaayini arunthathikkum sannathi illai Nallavelai kannakkikku penmagal illai Antha naalaayini arunthathikkum sannathi illai Irunthirunthaal intha neram entha kolamo Avar irupathukkum muppathukkum alaiya nerumo Avar irupathukkum muppathukkum alaiya nerumo Female : Selai virkum kadaiyai kandean theru theruvaaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga Female : Kattazhagai pengalukkae kadavul thanthandi Athai vettaveli pottalilae vittu vittaandi Thottavarkal anaivarukkum sonthamendraandi Athai sollivittu koyililae thoongivittandi…. Athai sollivittu koyililae thoongivittandi…. Female : Selai virkum kadai kandaen theru theruvaaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga Aalai virkkum kadaiyai kandaen mudhan muthalaga
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக பெண் : பாலை விற்கும் பெண்ணைக் கண்டேன் பட்டிக்காட்டிலே பாலை விற்கும் பெண்ணைக் கண்டேன் பட்டிக்காட்டிலே தன் பருவம் விற்கும் பெண்ணைக் கண்டேன் பட்டணத்திலே……… பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக பெண் : ஒழுக்கமென்று சிறுவயதில் பாடம் படித்தாள் இவள் ஒருவனுக்கே ஒருத்தியென்று வேதம் படித்தாள் வழுக்கிவிடும் பூமியிலே வந்து பிறந்தாள் இந்த வஞ்சமில்லா பாவிமகள் வழுக்கி விழுந்தாள் இந்த வஞ்சமில்லா பாவிமகள் வழுக்கி விழுந்தாள் பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக பெண் : நல்லவேளை கண்ணகிக்குப் பெண்மகள் இல்லை அந்த நளாயினி அருந்ததிக்கும் சந்ததி இல்லை நல்லவேளை கண்ணகிக்குப் பெண்மகள் இல்லை அந்த நளாயினி அருந்ததிக்கும் சந்ததி இல்லை இருந்திருந்தால் இந்த நேரம் எந்தக் கோலமோ அவர் இருபதுக்கும் முப்பதுக்கும் அலைய நேருமோ அவர் இருபதுக்கும் முப்பதுக்கும் அலைய நேருமோ பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக பெண் : கட்டழகைப் பெண்களுக்கே கடவுள் தந்தான்டி அதை வெட்டவெளிப் பொட்டலிலே விட்டு விட்டான்டி தொட்டவர்கள் அனைவருக்கும் சொந்தமென்றான்டி அதைச் சொல்லிவிட்டுக் கோயிலிலே தூங்கிவிட்டாண்டி….. அதைச் சொல்லிவிட்டுக் கோயிலிலே தூங்கிவிட்டாண்டி….. பெண் : சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத் தெருவாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதன் முதலாக