← Back

En Aaruyire Nal Song Lyrics

Singers : S. Janaki and P. B. Sreenivas Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Humming : …… Male : En aaruyirae nal vaan amudhae Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae Female : Thannai maranthom vinnil parandhom Innaal inithaaga vaazhvinil or thirunaalae Both : Thottu vilaiyaadum sittugalai polae Vatta miduvom anbae Male : Mudivaana inbam thodarathu thunbam Nilaiyaana sondham endrum neengaadha bandham Humming : …………….. Male : Un thamarai kannangal sivapadhilae Senthaen nirai kinnam en ninaippinilae Un sael vizhi thullum en jeevanai allum Thaniyaaga vandhum ingae thadai yenamma Female : Padikaatha paadam nadakkatha paadhai Pazhgadha paedhai ennai thadukaadho naanam Humming : ……………… Female : Ullasathil pen ullam midhanthiduma Sollavidil en aaval kuraindhiduma En meedhenna kobam kannaal ennai paarum Indrodu endhan sondham kollai poguma Both : En aaruyirae nal vaan amudhae Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae Thannai maranthom vinnil parandhom Innaal inithaaga vaazhvinil or thirunaalae Thottu vilaiyaadum sittugalai polae Vatta miduvom anbae Humming : ……………………
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் முனங்கல் : ……………….. ஆண் : என் ஆருயிரே நல் வானமுதே நம் காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே பெண் : தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம் இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே இருவர் : தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே வட்டமிடுவோம் அன்பே…… ஆண் : முடிவான இன்பம் தொடராது துன்பம் நிலையான சொந்தம் என்றும் நீங்காத பந்தம் முனங்கல் : ……………….. ஆண் : உன் தாமரைக் கன்னங்கள் சிவப்பதிலே செந்தேன் நிறைக் கிண்ணம் என் நினைப்பினிலே உன் சேல் விழி துள்ளும் என் ஜீவனை அள்ளும் தனியாக வந்தும் இங்கே தடை ஏனம்மா பெண் : படிக்காத பாடம் நடக்காத பாதை பழகாத பேதை என்னை தடுக்காதோ நாணம் முனங்கல் : ……………….. பெண் : உல்லாசத்தில் பெண்ணுள்ளம் மிதந்திடுமா சொல்லாவிடில் என் ஆவல் குறைந்திடுமா என் மீதென்ன கோபம் கண்ணாலென்னை பாரும் இன்றோடு எந்தன் சொந்தம் கொள்ளை போகுமா இருவர் : என் ஆருயிரே நல் வானமுதே நம் காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே….. தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம் இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே வட்டமிடுவோம் அன்பே…… முனங்கல் : ………………..