← Back

Vizhi Oram Song Lyrics

Singers : BR Vaany Srikanth, Poomathi Priya and Kumaresh Kamalakannan Music by : Ztish Female : Vizhi oram undhan yekkam Unnai kaana vaadum nenjam Engu sendraai vegu dhooram Tholaithenae unnai naanum Female : Thozh saayavae nee illaiyae Unakkaagathanae vaazhum endhan jeevanae En uyirae Nee indri pogum naatkal ingu vedhanai Vaa uyirae Female : Ah…ah…aa…aaa….haaa.. Ah…ah…aa…aaa….haaa.. Female : Unnodu naanum sera Nee sendra paadhai engae Kaanamal thedi nindren Kaadhal nenjae nenjae Female : Kan moodum neram kooda En munnae unnai kanden Kanavodu kavithai aana Maayam enna enna Female : Enai vittu yen pirinthaai En anbae Naanum thudikindren Ninaivodu naan endrum uyirai Unai yendhi nindrenae Male : Oh nanbaa En nanbaa Neeyum illai Engae nanbaa Maru jenmam ondru irunthaal Undhan natpae podhum nanbaa Male : Un thyagamae eedillaiyae Naan seidha paavam Ennai ingu vaattuthae En nanbanae Vidai illa kelviyaaga Maari ponadhae En vazhkaiyae Male : Uyir pogum neram kooda Anbaana paarvai thadhaai Un natpin aalathai naan Kanden angae angae Male : Naan seidha dhrogam ennul Theeyaaga maari maari Ovvoru naalum ennai Kolluthingae ingae Vazhi thadu maari sendren naan Vazhiyodu vaazhgindren Ini engu povathu naan endru Ennaiyae ketkindren
பாடகர்கள் : பி. ஆர். வாணி ஸ்ரீகாந்த், பூமதி பிரியா மற்றும் குமரேஷ் கமலகண்ணன் இசையமைப்பாளர் : ஜிதிஷ் பெண் : விழி ஓரம் உந்தன் ஏக்கம் உன்னை காண வாடும் நெஞ்சம் எங்கு சென்றாய் வெகு தூரம் தொலைத்தேனே உன்னை நானும் பெண் : தோள் சாயவே நீ இல்லையே உனக்காகத்தானே வாழும் எந்தன் ஜீவனே என் உயிரே நீ இன்றி போகும் நாட்கள் இங்கு வேதனை வா உயிரே பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஹா….. ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஹா….. பெண் : உன்னோடு நானும் சேர நீ சென்ற பாதை எங்கே காணமல் தேடி நின்றேன் காதல் நெஞ்சே நெஞ்சே பெண் : கண்மூடும் நேரம் கூட என் முன்னே உன்னை கண்டேன் கனவோடு கவிதை ஆன மாயம் என்ன என்ன பெண் : எனை விட்டு ஏன் பிரிந்தாய் என் அன்பே நானும் துடிகின்றேன் நினைவோடு நான் என்றும் உயிரை உன்னை ஏந்தி நின்றேனே ஆண் : ஓ நண்பா என் நண்பா நீயும் இல்லை எங்கே நண்பா மறு ஜென்மம் ஒன்று இருந்தால் உந்தன் நட்பே போதும் நண்பா ஆண் : உன் தியாகமே ஈடில்லையே நான் செய்த பாவம் என்னை இங்கு வாட்டுதே என் நண்பனே விடை இல்லா கேள்வியாக மாறி போனதே என் வாழ்க்கையே ஆண் : உயிர் போகும் நேரம்கூட அன்பான பார்வை தந்தாய் உன் நட்பின் ஆழத்தை நான் கண்டேன் அங்கே அங்கே ஆண் : நான் செய்த துரோகம் என்னுள் தீயாக மாறி மாறி ஒவ்வொரு நாளும் என்னை கொல்லுதிங்கே இங்கே வழி தடு மாறி சென்றேன் நான் வழியோடு வாழ்கின்றேன் இனி எங்கு போவது நான் என்று என்னையே கேட்கிறேன்