← Back

Velga Naadu Song Lyrics

Singer : C. S. Jayaraman Music by : K. V. Mahadevan Male : Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Chorus : Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Chorus : Velga naadu velga naadu velga velgavae Male : Thaayin aanai ketpadharkku Thalai vananghum thangamae Thalai koduthu thaayin maanam Kaathiduvaai singamae Sendru vaa vendru vaa… Chorus : Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Male : Kuzhalai pola mazhalai pesum Kuzhandhaigalin muthamum Konjugindra anjugathin Kola mozhi sathamum Male : Kuzhalai pola mazhalai pesum Kuzhandhaigalin muthamum Konjugindra anjugathin Kola mozhi sathamum Un kundru tholil pudhu balathai Vazhangumadaa nithamum Sendru vaa vendru vaa… Chorus : Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Male : Magimai konda mannin meedhu Edhirigalin kaalgal Chorus : Edhirigalin kaalgal Male : Malar parippadhillaiyadaa Veerargalin kaigal Chorus : Maa veerargalin kaigal Male : Sendru vaa vendru vaa… Chorus : Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae Male : Ongiya vaal pondra vadivamadaa Avar oli vazhiyil ulagathin padivamadaa Vengai puli mannanadaa Veerargalin thalaivanadaa Avar kattalaikku kaathirundha nallavanae Kalam nokki purappadadaa vallavanae…
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே….. குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே….. குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே ஆண் : தாயின் ஆணை கேட்பதற்கு தலை வணங்கும் தங்கமே தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே சென்று வா வென்று வா…….. குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே….. ஆண் : குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தமும் ஆண் : குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தமும் உன் குன்று தோளில் புது பலத்தை வழங்குமடா நித்தமும் சென்று வா வென்று வா……. குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே….. ஆண் : மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் குழு : எதிரிகளின் கால்கள் ஆண் : மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள் குழு : மாவீரர்களின் கைகள் ஆண் : சென்று வா வென்று வா……. குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே….. ஆண் : ஓங்கிய வாள் போன்ற வடிவமடா அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா வேங்கைப் புலி மன்னனடா வீரர்களின் தலைவனடா அவர் கட்டளைக்குக் காத்திருந்த நல்லவனே களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே….