← Back

Kadan Song Lyrics

Singers : Anthony Daasan and Ramesh Vinayakam Music by : Ramesh Vinayakam Lyrics by : Vairamuthu Male : Kolathang karaiyoram Kurumbaadu maechuvarum Aiyaa paeru enna Aiyyanaaru chaervaingalaa? Male : Kaathu kadungaathu Kannmaraikkum chengaathu Ammi parandhuvara Aalamaram vizhum kaathu Male : Indhak kaathoda Elandhamullu kaattoda Andhima kaalathula Aadotti alaivadhenna? Male : Ottu kovanamae Oridathil nikkalaiyae Athuvaana kaattukkulla Aadotti alaivadhenna? Aadotti alaivadhenna? Aadotti alaivadhenna? Male : Ukkaaru thambi Oorupatta kadhaiyirukku Ninnabadi naan chonnaa Nenjuvali vandhuvidum Male : Padamedukkum paambidam Naan pattahadhai chonnaakkaa Padatha churuttividum Padapadannu azhudhuvidum Male : Padamedukkum paambidam Naan pattahadhai chonnaakkaa Padatha churuttividum Padapadannu azhudhuvidum Male : Ennakki pondaatti Ennavittu ponaaloo Annaikkae embadukkai Thinnaikku vandhiruchu Male : Naaidhinnum chothula Naalanju kavalatha Enakkum pottuvachaan Erakkamulla embulla Male : Naaidhinnum chothula Naalanju kavalatha Enakkum pottuvachaan Erakkamulla embulla Male : Koni chaakkoda Kudumbam naan nadathaiyila Loganaadhan mavaraasan Loanu vaangi thaaraennaan Male : Aenjaadhi ennaannu Ezhubaeru kaettaaga Yedhedho kadhapaesi Engileesil chirichaaga Male : Nadaiyaa nadakkavittu Narambellaam thaeyavittu Commison eduthukkittu Kadangaasu kuduthaaga Male : Avanukku ainnooraam Ivanukku munnooraam Anga anga vettalanaa Aadugutti podaadhaam Male : Kottagatta loanu vaangi Kudisai katti nikkiranae Kottagatta loanu vaangi Kudisai katti nikkiranae Aanaivaanga loanvaangi Aaduvaangi maeykkiranae Male : Aattukku patta kadan Adaibadavae aadirukku Lanjathil patta kadan Naangatta thoadhirukkaa? Lanjathil patta kadan Naangatta thoadhirukkaa? Male : Agilathai ellaam Aadhisaesan chumakkiradhaam Aadhisaesanum chaethu Aiyanaaru naanjumakkaen
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ரமேஷ் விநாயகம் இசை அமைப்பாளர் : ரமேஷ் விநாயகம் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : கொளத்தங் கரையோரம் குறும்பாடு மேச்சுவரும் அய்யா பேரு என்ன அய்யனாரு சேர்வைங்களா? ஆண் : காத்து கடுங்காத்து கண்மறைக்கும் செங்காத்து அம்மி பறந்துவர ஆலமரம் விழும் காத்து ஆண் : இந்தக் காத்தோட எலந்தமுள்ளுக் காட்டோட அந்திம காலத்துல ஆடோட்டி அலைவதென்ன? ஆண் : ஒட்டுக் கோவணமே ஓரிடத்தில் நிக்கலையே அத்துவானக் காட்டுக்குள்ள ஆடோட்டி அலைவதென்ன? ஆடோட்டி அலைவதென்ன? ஆடோட்டி அலைவதென்ன? ஆண் : உக்காரு தம்பி ஊருபட்ட கதையிருக்கு நின்னபடி நான் சொன்னா நெஞ்சுவலி வந்துவிடும் ஆண் : படமெடுக்கும் பாம்பிடம்நான் பட்டகதை சொன்னாக்கா படத்தச் சுருட்டிவிடும் படபடன்னு அழுதுவிடும் ஆண் : படமெடுக்கும் பாம்பிடம்நான் பட்டகதை சொன்னாக்கா படத்தச் சுருட்டிவிடும் படபடன்னு அழுதுவிடும் ஆண் : என்னக்கிப் பொண்டாட்டி என்னவிட்டுப் போனாளோ அன்னைக்கே எம்படுக்கை திண்ணைக்கு வந்திருச்சு ஆண் : நாய்தின்னும் சோத்துல நாலஞ்சு கவளத்த எனக்கும் போட்டுவச்சான் எரக்கமுள்ள எம்புள்ள ஆண் : நாய்தின்னும் சோத்துல நாலஞ்சு கவளத்த எனக்கும் போட்டுவச்சான் எரக்கமுள்ள எம்புள்ள ஆண் : கோணிச் சாக்கோட குடும்பம்நான் நடத்தையில லோகநாதன் மவராசன் லோன்வாங்கித் தாரேன்னான் ஆண் : ஏஞ்சாதி என்னான்னு ஏழுபேரு கேட்டாக ஏதேதோ கதபேசி இங்கிலீசில் சிரிச்சாக ஆண் : நடையா நடக்கவிட்டு நரம்பெல்லாம் தேயவிட்டு கமிசன் எடுத்துக்கிட்டுக் கடன்காசு குடுத்தாக ஆண் : அவனுக்கு ஐந்நூறாம் இவனுக்கு முந்நூறாம் அங்கேங்க வெட்டலேன்னா ஆடுகுட்டி போடாதாம் ஆண் : கோட்டகட்ட லோனுவாங்கிக் குடிசைகட்டி நிக்கிறனே கோட்டகட்ட லோனுவாங்கிக் குடிசைகட்டி நிக்கிறனே ஆனைவாங்க லோன்வாங்கி ஆடுவாங்கி மேய்க்கிறனே ஆண் : ஆட்டுக்குப் பட்ட கடன் அடைபடவே ஆடிருக்கு லஞ்சத்தில் பட்ட கடன் நான்கட்டத் தோதிருக்கா? லஞ்சத்தில் பட்ட கடன் நான்கட்டத் தோதிருக்கா? ஆண் : அகிலத்தை எல்லாம் ஆதிசேசன் சுமக்கிறதாம் ஆதிசேசனும் சேத்து அய்யனாரு நாஞ்சுமக்கேன்