← Back

Vaanthooral Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : Yuvan Shankar Raja Male : Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Per iruttil en kangal meedhae Minnum minminiyae Male : Vidhaiyai puratti pottalum Vinnai parthu thaan mulaikkum Per anbinaal vazhkaiyin Konalgal nerpadum Male : Paruvam kadanthu ponalum Arugampullu saagathu Oor thooralil mothamaai Patchaiyaai maaridum Male : Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Per iruttil en kangal meedhae Minnum minminiyae Male : Aaaa…aaa..haaa….. Haaa…aaaa…aaa….. Nirisani dhanipa magamapa…. Nirisani dhanipa magamapa…. Male : Engae sendru veezhvathendru Sinthum mazhai arinthathillai Sondha bandham yaar vasam endru Thedum uyir therinthathillai Male : Megamattra vaanathin keezhae Thagamuttra paravaiyai polae Yedhumattru parantha podhum Naadum thunaigal Male : Eerapadham katril irunthaal Thoorathilae kaadu therinthaal Pakkam thaanae neer nilai endru Pesum kuralgal Male : Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Male : Mella thaanae sollum maarum Solli thaanae sogam theerum Vaazhum aasai ullaperkae Vazhkai endrumae inikkum Male : Oonappatta jeevan yedhum Pattiniyaal saavathillai Engo sellum erumbu kooda Irai kodukkum Male : Megam mattum vaanamillai Dhegam mattum vazhkaiyillai Pulangalai kadanthu kooda Inbam irukkum Male : Vaanthooral en tholgal melae Vaalaattum naalae Per iruttil en kangal meedhae Minnum minminiyae
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே ஆண் : விதையை புரட்டி போட்டாலும் விண்ணை பார்த்து தான் முளைக்கும் பேர் அன்பினால் வாழ்க்கையின் கோணல்கள் நேர்படும் ஆண் : பருவம் கடந்து போனாலும் அருகம்புல்லு சாகாது ஓர் தூரலில் மொத்தமாய் பச்சையாய் மாறிடும் ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே ஆண் : ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ… ஆ நிரிசனி தனிப மகமப நிரிசனி தனிப மகமப ஆண் : எங்கே சென்று வீழ்வதென்று சிந்தும் மழை அறிந்ததில்லை சொந்த பந்தம் யார் வசம் என்று தேடும் உயிர் தெரிந்ததில்லை ஆண் : மேகமற்ற வானத்தின் கீழே தாகம்முற்ற பறவையை போலே ஏதுமற்று பறந்த போதும் நாடும் துணைகள் ஆண் : ஈரப்பதம் காற்றில் இருந்தால் தூரத்திலே காடு தெரிந்தால் பக்கம் தானே நீர் நிலை என்று பேசும் குரல்கள் ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே ஆண் : மெல்ல தானே சொல்லும் மாறும் சொல்லி தானே சோகம் தீரும் வாழும் ஆசை உள்ளபேர்க்கே வாழ்க்கை என்றுமே இனிக்கும் ஆண் : ஊனப்பட்ட ஜீவன் ஏதும் பட்டினியால் சாவதில்லை எங்கோ செல்லும் எறும்பு கூட இரை கொடுக்கும் ஆண் : மேகம் மட்டும் வானமில்லை தேகம் மட்டும் வாழ்க்கையில்லை புலன்களை கடந்து கூட இன்பம் இருக்கும் ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே