← Back

Sange Muzhangu Song Lyrics

Singers : Sirkazhi Govindarajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male : { Sangae muzhangu } (2) Female : Sangae muzhangu Male & Female : Sangae muzhangu Female : Engal Vaazhvum engal Valamum mangaadha Thamizh endru { Sangae muzhangu } (2) Female : Engal Vaazhvum engal Valamum mangaadha Thamizh endru Sangae muzhangu Female : Engal Pagaivar engo Maraindhaar ingulla Thamizhargal ondraadhal kandu Female : Pongu Thamizharku innal Vilaithaal Female : ……………….. Female : Pongu Thamizharku innal Vilaithaal sangaaram Nisamendru Sangae muzhangu Chorus : { Sangae muzhangu } (3) Female : Thingalodum Sezhum parudhi thannodum Vinnodum udukalodum Mangul kadal ivatrodum pirandha {Thamizhudan pirandhom naangal } (2) Male : Aanmai Singathin kootamendrum Siriyorkum nyabagam sei Muzhangu sangae Chorus : Sangae muzhangu Chorus : ……………………. Male : Venkodumai Saakaatil vilaiyaadum Thol engalvetri tholgal Male : …………………… Male : Gangayai Pol kaviri pol karuthukal Oorum ullam engal ullam Male & Female : Venkurudhi Thanil kamazhndhu veeram Seigindra thamizh engal moocham Male : Thamizh engal moocham
பாடகி : பி. சுஷீலா பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { சங்கே முழங்கு } (2) பெண் : சங்கே முழங்கு ஆண் & பெண் : சங்கே முழங்கு பெண் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று { சங்கே முழங்கு } (2) பெண் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு பெண் : எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு பெண் : பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் பெண் : ……………… பெண் : பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு குழு : { சங்கே முழங்கு } (3) பெண் : திங்களோடும் செழும் பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த { தமிழுடன் பிறந்தோம் நாங்கள் } (2) ஆண் : ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே குழு : சங்கே முழங்கு குழு : ……………………….. ஆண் : வென் கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்வெற்றித் தோள்கள் ஆண் : ……………………….. ஆண் : கங்கையைப் போல் காவிரிப் போல் கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம் ஆண் & பெண் : வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் ஆண் : தமிழ் எங்கள் மூச்சாம்