← Back

Azhagiya Pengal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : ………….. Female : Azhagiya pengal vaazhvathae Aadvar sorpadi aadavaa Azhagiya pengal vaazhvathae Aadvar sorpadi aadavaa Aayiram thollai anupaviththaalum Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa…. Female : Azhagiya pengal vaazhvathae Aadvar sorpadi aadavaa Female : Seerudan sirappudan unmaiyai kattraan Theruvinilae avan manaiviyai vittraan Kaadhinil oruvan kurai solla kettaan Kaattinil oruvan manaviyai vittaan Female : Bedhai oruththi sabhaiyinil nindraal Paei pol oruvan thugilinai urinthaan Kadhaliththey oru kuzhanthai piranthum Kayinil munivan vaangida maruththaan Kayinil munivan vaangida maruththaan Male : Azhagiya pengal vaazhvathae Aadavar thammai aatti vaikkavaa Azhagiya pengal vaazhvathae Aadavar thammai aatti vaikkavaa Aayiram thollai anupaviththaalum Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa… Male : Udambinil oruththi paathiyai kettaal Unchchnthalaiyinil oruththi utkaarnthaal Kattiya kanvanai kattilil oruththi Kaalgalai pidikka kattalaiyittaal Male : Andrey oruththi sabathameduththu Aayiram pergalai porinil maaththaal Aasaiyil oruththi mookkarupattu Annanin vaazhvil emanaai vanthaal Annanin vaazhvil emanaai vanthaal Female : Vanjagar aangal Male : Vanjiyar neengal Female : Paadhagar aangal Male : Paavigal neengal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………….. பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் சொற்படி ஆடவா அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் சொற்படி ஆடவா ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும் ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா…ஆ….. பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் சொற்படி ஆடவா பெண் : சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான் தெருவினிலே அவன் மனைவியை விற்றான் காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான் காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான் பெண் : பேதை ஒருத்தி சபையினில் நின்றாள் பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான் காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும் கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான் கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான் ஆண் : அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும் ஆமைகள் போலே வாழவா வாழவா…ஆ….. ஆண் : உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள் உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள் கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள் ஆண் : அன்றே ஒருத்தி சபதமெடுத்து ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள் ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள் அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள் பெண் : வஞ்சகர் ஆண்கள் ஆண் : வஞ்சியர் நீங்கள் பெண் : பாதகர் ஆண்கள் ஆண் : பாவிகள் நீங்கள்……..