← Back

Elangaathu Veesudhey Solo Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : Ilayaraja Male : Elangaathu veesudhae Isai pola pesudheae Valaiyaadha moongilil Raagam valainchu odudhae Megham muzhichu ketkudhae Male : Karum paarai manasula Mayil thogai virikkudhae Mazhai chaaral thelikkudhae Pul veli paadhai virikkudhae Vaanavil kudaiyum pudikkudhae Pul veli paadhai virikkudhae Vaanavil kudaiyum pudikkudhae Male : Maniyin oosai kettu mana kadhavu thirakkudhae Puthiya thaalam pottu udal kaatril midhakkudhae Male : Elangaathu veesudhae Isai pola pesudheae Valaiyaadha moongilil Raagam valainchu odudhae Megham muzhichu ketkudhae Male : Pinni pinni chinna ezhaiyodum Nenjai allum vanna thuni pola Onnukkonnu dhaan enanji irukku Uravu yellaam amanji irukku Alli alli thandhu uravaadum Annamadi indha nelam pola Silarukku dhaan manasu irukku Ulagam adhil nilaichu irukku Nethu thanimaiyila pochu.. yaarum thunai illai Yaaro vazhi thunaikku vandhaal edhum inai illai Ulagathil edhuvum thanichu illaiyae Kuzhalil raagam malaril vaasam serndhadhu pola Male : Elangaathu veesudhae Isai pola pesudheae Valaiyaadha moongilil Raagam valainchu odudhae Megham muzhichu ketkudhae Male : Manasula enna aagaayam Dhinam dhinam adhu pudhir podum Ragasiyatha yaaru arinja? adhisayatha yaaru purinja? Vedha vidhaikkira kai dhaanae Malar parikkudhu dhinam dhoorum Malar thodukka naarai eduthu Yaar thodutha maalaiyaachu? Aalam vizhudhilae oonjal aadum kili yellaam Moodum siragilae mella pesum kadhaiyellaam Thaalaattu kettidaamalae..thaayin madiyai thedi oodum malai nathi polaa…… Male : Karum paarai manasula Mayil thogai virikkudhae Mazhai chaaral thelikkudhae Pul veli paadhai virikkudhae Vaanavil kudaiyum pudikkudhae Pul veli paadhai virikkudhae Vaanavil kudaiyum pudikkudhae Male : Maniyin oosai kettu mana kadhavu thirakkudhae Puthiya thaalam pottu udal kaatril midhakkudhae
பாடகா் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே