← Back

Karanathai Vilakkava Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Karanaththai vilakkavaa Vaanipaththai nadaththavaa Naadagaththai thodakkavaa Female : Karanaththai vilakkavaa Vaanipaththai nadaththavaa Naadagaththai thodakkavaa Female : Neeyenna kettaalum Eduththu koduththu mudikka naan undu Naan unnai ketkkaamal Ninaiththa kanakkai mudikka yaar undu Female : Edhu vendum unakku theriyaathaa kanakku Pudhithalla enakku Iniyenna nadaththu Seettai kalaikkattumaa….aa…aa…aa…aa…. Female : Karanaththai vilakkavaa…aa… Vaanipaththai nadaththavaa….aa…. Naadagaththai thodakkavaa…aa… Female : Santhaikku vantha pinnae Irukkum sarakkai pidiththu paarkkaathae Yaarukku ennavendru Alanthu kodukka thayakkam kaattaathae Female : Konjungal izhuththu Pen vendum unakku Idhu enna vazhakku sari solli nadaththu Peram mudikattumaa…aa…aa…aa….aa… Female : Naalenna pozhuthenna Kidaiththa idaththai valaikka koodaatho Naalaikku endraalae Manaththil irukkum ninaippu maaraatho Female : Thadam paarththu izhuththu Valai pottu pidiththu Manampola mudiththu vazhi paarththu thuraththu Neram perithallavo…aa…aa….aa… Female : Karanaththai vilakkavaa…aa… Vaanipaththai nadaththavaa….aa…. Naadagaththai thodakkavaa…aa…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காரணத்தை விளக்கவா வாணிபத்தை நடத்தவா நாடகத்தை தொடக்கவா பெண் : காரணத்தை விளக்கவா வாணிபத்தை நடத்தவா நாடகத்தை தொடக்கவா பெண் : நீயென்ன கேட்டாலும் எடுத்து கொடுத்து முடிக்க நான் உண்டு நான் உன்னை கேட்காமல் நினைத்த கணக்கை முடிக்க யார் உண்டு பெண் : எது வேண்டும் உனக்கு தெரியாதா கணக்கு புதிதல்ல எனக்கு இனியென்ன நடத்து சீட்டைக் கலைக்கட்டுமா……ஆ…ஆ…..ஆ….ஆ… பெண் : காரணத்தை விளக்கவா…..ஆ…. வாணிபத்தை நடத்தவா…..ஆ…. நாடகத்தை தொடக்கவா…..ஆ…. பெண் : சந்தைக்கு வந்த பின்னே இருக்கும் சரக்கை பிடித்து பார்க்காதே யாருக்கு என்னவென்று அளந்து கொடுக்க தயக்கம் காட்டாதே பெண் : கொஞ்சுங்கள் இழுத்து பெண் வேண்டும் உனக்கு இது என்ன வழக்கு சரி சொல்லி நடத்து பேரம் முடிக்கட்டுமா…..ஆ…ஆ…..அ…..ஆ… பெண் : நாளென்ன பொழுதென்ன கிடைத்த இடத்தை வளைக்கக் கூடாதோ நாளைக்கு என்றாலே மனத்தில் இருக்கும் நினைப்பு மாறாதோ பெண் : தடம் பார்த்து இழுத்து வலைப் போட்டு பிடித்து மனம் போல முடித்து வழிப் பார்த்து துரத்து நேரம் பெரிதல்லவோ….ஆ…..ஆ…..ஆ….. பெண் : காரணத்தை விளக்கவா…..ஆ…. வாணிபத்தை நடத்தவா…..ஆ…. நாடகத்தை தொடக்கவா…..ஆ….