← Back

Thangam Vilaiyum Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : T. R. Pappa Lyrics by : A. Maruthakasi Male : Thangam vilaiyum thirunaadu Indha naadu en thaai naadu Naan thangiyirukkathaan enakkillai Ingae oru veedu Male : Thangam vilaiyum thirunaadu Indha naadu en thaai naadu Naan thangiyirukkathaan enakkillai Ingae oru veedu Male : Thangam vilaiyum thirunaadu Indha naadu en thaai naadu Male : Andhi varaiyilum kanji kavalaiyae Azhiyaa perungavalai Poluthaana pinnalae thalaiyai saaikkavae Aaradi idangavalai Male : Sandhupondhugal paadhaiyil thoonga Sattam idam thara villai Samathuvam enbathu vaarthaiyil irukkum Vazhkkaiyilae illai Male : Thangam vilaiyum thirunaadu Indha naadu en thaai naadu Naan thangiyirukkathaan enakkillai Ingae oru veedu Male : Ellorum innaattu mannargal endrae Maedaiyil muzhangukindraar Adhai yettilum ezhudhi kaasaakki thanadhu Vayittirkku vilungukindrar Male : En pondra mannargal ethanai kodi Enbathu theriyadha Indha unmaiyai moodi maraithaalum Ezhaikku puriyaadha Male : Thangam vilaiyum thirunaadu Indha naadu en thaai naadu Naan thangiyirukkathaan enakkillai Ingae oru veedu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : தங்கம் விளையும் திருநாடு இந்த நாடு என் தாய்நாடு நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை இங்கே ஒரு வீடு……. ஆண் : தங்கம் விளையும் திருநாடு இந்த நாடு என் தாய்நாடு நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை இங்கே ஒரு வீடு……. ஆண் : தங்கம் விளையும் திருநாடு இந்த நாடு என் தாய்நாடு ஆண் : அந்தி வரையிலும் கஞ்சிக் கவலையே அழியாப் பெருங்கவலை பொழுதான பின்னாலே தலையை சாய்க்கவே ஆறடி இடங்கவலை ஆண் : சந்துபொந்துகள் பாதையில் தூங்க சட்டம் இடம் தரவில்லை சமத்துவம் என்பது வார்த்தையிலிருக்கும் வாழ்க்கையிலே இல்லை…… ஆண் : தங்கம் விளையும் திருநாடு இந்த நாடு என் தாய்நாடு நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை இங்கே ஒரு வீடு……. ஆண் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றே மேடையில் முழங்குகின்றார் அதை ஏட்டிலும் எழுதி காசாக்கித் தனது வயறிற்கு விழுங்குகின்றார் ஆண் : என் போன்ற மன்னர்கள் எத்தனை கோடி என்பது தெரியாதா இந்த உண்மையை மூடி மறைத்தாலும் ஏழைக்கு புரியாதா…….. ஆண் : தங்கம் விளையும் திருநாடு இந்த நாடு என் தாய்நாடு நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை இங்கே ஒரு வீடு…….