← Back

Agalathey Vilagathey Song Lyrics

Singers : Diwakar and Suganya Jegathesan Music by : Shameshan Mani Maaran Female : Anbae nee yerpaaiyo Endhan uyir kaadhal Unnodu naan vaazha vendum Female : Anbae un paarvaigal Nenjukullae saaral Sattendru thozh saaya thondrum Female : Agalathae vilagathae Nodi neram enaiyae Nedunaalai manam yengum Thunai neeyae Female : Sila neram sarugaagi Vidhi yeno uthirnthaen Siragae nee kidaithaayae Paranthaenae Female : ……………………………. Male : Anbendra kaattil Allaadum pennae En kaadhal sollavaa Mounangal pesum Un vaarthai korthu Arthangal sollidavaa Male : Nenjodu saithu Konji naan pesa Ulloora aasai thaan Endraalum yeno Sollaamal ponen Poiyaana veshathil naan Male : Saththangal illaa othigaiyai Niththamum unnaal katraenadi Kuyil osai mazhai osai ariyathae uyirae Ivai yaavum ini naanae unathaanaen Male : Uliyosai unaraamal Vazhi thaangum silaiyae Imai kooda uthiraamal Unai kaappen Male : Kannae nee kaelaaiyo Nenjam sollum paadal Eppodhum un perai sollum Female : Anbae un paarvaigal Nenjukullae saaral Sattendru thozh saaya thondrum Male : Kuyil osai mazhai osai ariyathae uyirae Ivai yaavum ini naanae unathaanaen Female : Sila neram sarugaagi vidhi yeno uthirnthaen Siragae nee kidaithaayae paranthaenae Female : ………………………………..
பாடகர்கள் : திவாகர் மற்றும் சுகன்யா ஜெகதீசன் இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் பெண் : அன்பே நீ ஏற்பாயோ எந்தன் உயிர் காதல் உன்னோடு நான் வாழ வேண்டும் பெண் : அன்பே உன் பார்வைகள் நெஞ்சுகுள்ளே சாரல் சட்டென்று தோள் சாய தோன்றும் பெண் : அகலாதே விலகாதே நொடி நேரம் எனையே நெடு நாளாய் மனம் ஏங்கும் துணை நீயே பெண் : சில நேரம் சருகாய் விதி ஏனோ உதிர்ந்தேன் சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே பெண் : ………………………………….. ஆண் : அன்பென்ற காட்டில் அல்லாடும் பெண்ணே என் காதல் சொல்லவா மௌனங்கள் பேசும் உன் வார்த்தை கோர்த்து அர்த்தங்கள் சொல்லிடவா ஆண் : நெஞ்சோடு சாய்த்து கொஞ்சி நான் பேச உள்ளூர ஆசைதான் என்றாலும் ஏனோ சொல்லாமல் போனேன் பொய்யான வேஷத்தில் நான் ஆண் : சத்தங்கள் இல்லா ஒத்திகையை நித்தமும் உன்னால் கற்றேனடி குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே இவை யாவும் இனி நானே உனதானேன் ஆண் : உளியோசை உணராமல் வழி தாங்கும் சிலையே இமை கூட உதிராமல் உன்னை காப்பேன் ஆண் : கண்ணே நீ கேளாயோ நெஞ்சம் சொல்லும் பாடல் எப்போதும் உன் பேரை சொல்லும் பெண் : அன்பே உன் பார்வைகள் நெஞ்சுக்குள்ளே சாரல் சட்டென்று தோள் சாய தோன்றும் ஆண் : குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே இவை யாவும் இனி நானும் உனதானேன் பெண் : சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன் சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே பெண் : …………………………………….