← Back

Pattu Selai Kaathaada Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Pattu chaelai kaathaada Paruva maeni koothaada Pattu chaelai kaathaada Paruva maeni koothaada Kattu koondhal mudithavalae ennai Kaadhal valaiyil adaithavalae Female : Arumbu meesai thulli vara Azhagu punnagai alli vara Arumbu meesai thulli vara Azhagu punnagai alli vara Kurumbu paarvai paarthavarae ennai Koottu kiliyaai adaithavarae Male : Kaiyil eduthaal thuvandu vidum Kannam irandum sivandhu vidum Kaiyil eduthaal thuvandu vidum Kannam irandum sivandhu vidum Chinna idaiyae sithiramae Sirikkum kaadhal nithilamae Female : Nimirndhu nadakkum nadaiyazhagu Nerungi pazhagum kalaiyazhagu Nimirndhu nadakkum nadaiyazhagu Nerungi pazhagum kalaiyazhagu Amaidhiyil niraiyum mugathazhagu Yaavum unghal thaniyazhagu Male : Kattu koondhal mudithavalae ennai Kaadhal valaiyil adaithavalae Female : Kurumbu paarvai paarthavarae ennai Koottu kiliyaai adaithavarae Male : Uranginaalum vizhithaalum Oorgal thorum alaindhaalum Uranginaalum vizhithaalum Oorgal thorum alaindhaalum Mayanga vaithadhu oru mugamae Mangai undhan thirumugamae Female : Kaasu panangal kettkavillai Jaadhi madhangal paarkkavillai Kaasu panangal kettkavillai Jaadhi madhangal paarkkavillai Thaavi vandhadhu en manamae ini Thaazhvum vaazhvum un vasamae Male : Kattu koondhal mudithavalae ennai Kaadhal valaiyil adaithavalae Pattu chaelai kaathaada Paruva maeni koothaada Female : Kurumbu paarvai paarthavarae ennai Koottu kiliyaai adaithavarae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே பெண் : அரும்பு மீசை துள்ளி வர அழகுப் புன்னகை அள்ளி வர அரும்பு மீசை துள்ளி வர அழகுப் புன்னகை அள்ளி வர குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே ஆண் : கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும் கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே பெண் : நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு அமைதியில் நிறையும் முகத்தழகு யாவும் உந்தன் தனியழகு ஆண் : கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே பெண் : குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே ஆண் : உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உந்தன் திருமுகமே பெண் : காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே ஆண் : கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக் காதல் வலையில் அடைத்தவளே பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட பெண் : குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக் கூட்டுக் கிளியாய் அடைத்தவரே