← Back

Kaaviri Nagarinil – (2) Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Avar pooviri manjaththil porunthiya pinnae Kannagi vaazhavanthaal adhaiyum Madhavi kaana vanthaal Female : Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Female : Thiruvum manamum saernthathuthaanae Thirumanam endruraippaar Angu thiru veraagavum manam veraagavum Iruvarum thanithirunthaar Female : Maalai aninthavar sooriyan polae Kaaigindra gunamum ndu Aanaal mayakkaththil vanthaval venmathi polae Manathinil kulirvathundu Manathinil kulirvathundu Female : Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Female : Naadakaththil varum manamakkal ellaam Nallisai payilvathundu Antha naadagam mudinthu thiraiyum vizhunthaal Iruvarum pirivathundu Female : Aayirangkaalaththu thendralai polae Vaazhiya kulamagalae unnai Aruginil irunthu paarththu kondriruppaal Azhagiya kalaimagalae…..azhagiya kalaimagalae Female : Kaveri nagarinil kadarkarai oraththil Madhavi aada vanthaal Oru mannavan kooda vanthaan Avar pooviri manjaththil porunthiya pinnae Kannagi vaazhavanthaal adhaiyum Madhavi kaana vanthaal Madhavi kaana vanthaal
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே கண்ணகி வாழவந்தாள் அதையும் மாதவி காண வந்தாள்……. பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் பெண் : திருவும் மணமும் சேர்ந்ததுதானே திருமணம் என்றுரைப்பார் அங்கு திரு வேறாகவும் மனம் வேறாகவும் இருவரும் தனித்திருந்தார் பெண் : மாலை அணிந்தவர் சூரியன் போலே காய்கின்ற குணமும் உண்டு ஆனால் மயக்கத்தில் வந்தவள் வெண்மதி போலே மனதினில் குளிர்வதுண்டு மனதினில் குளிர்வதுண்டு….. பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் பெண் : நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம் நல்லிசை பயில்வதுண்டு அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால் இருவரும் பிரிவதுண்டு பெண் : ஆயிரங்காலத்து தென்றலை போலே வாழிய குலமகளே உன்னை அருகினில் இருந்து பார்த்துக் கொன்றிருப்பாள் அழகிய கலைமகளே……அழகிய கலைமகளே…… பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு மன்னவன் கூட வந்தான் அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே கண்ணகி வாழவந்தாள் அதையும் மாதவி காண வந்தாள்……. மாதவி காண வந்தாள்…….