← Back

Inba Inba Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male : Inba… inba… theeratha inba.. Neeye en kadhal venba Anbaa…. anbaa….aaraatha anba Neeye en vaazhvil penba Male : Inba… inba… theeratha inba.. Neeye en kadhal venba Anbaa…. anbaa….aaraatha anba Neeye en vaazhvil penba Male : Pesamal neeyum seigindra maayam Periba thaen uridum theevee Oyaamal veesum deiveega vaasam Unnoodu kandene oodhapoove Male : Inba… inba… theeratha inba.. Neeye en kadhal venba Anbaa…. anbaa….aaraatha anba Neeye en vaazhvil penba Male : Kuurai nila… kodai malai… Un madiyil uraiyaathao kalam.. Jodi puraa… kodi kuyil Un kuralil valiyathoo geetham… Male : Ayul varai… neeye gathi… Theyathadi en vaanmathi Kothai kolusugal osai… Kette peruguthe asai… Male : Thai kanda baram… Eraindhu madham… Naam konda kadhal Thangathu vedham Verethum vendam… Kai seru pothum… Male : Oravizhi… nooru mozhi… Un alagil olirathoo kaalai… Era idhazh… kaathu madal… Athanaiyum vilungaathoo aalai… Male : Koondhal muthal paatham varai Nee sootida nanee nagai.. Theerum kanakkariyamal… Melum koduthidum kaadhal… Male : Anbe un anbai nee kaatu konjam Erezhu jenmam ketkathu nenjam En moochum indru unnodu thanjam… Male : Inba… inba… theeratha inba.. Neeye en kadhal venba Anbaa…. anbaa….aaraatha anba Neeye en vaazhvil penba
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா.. நீயே என் காதல் வெண்பா அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா நீயே என் காதல் வெண்பா ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா.. நீயே என் காதல் வெண்பா அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா நீயே என் காதல் வெண்பா ஆண் : பேசாமல் நீயும் செய்கின்ற மாயம் பேரின்ப தேனில் ஊறிடும் தீவே ஓயாமல் வீசும் தெய்வீக வாசம் உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா.. நீயே என் காதல் வெண்பா அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா நீயே என் காதல் வெண்பா ஆண் : கூரை நிலா… கோடை மழை… உன் மடியில் உறையாதோ காலம்.. ஜோடி புறா… கோடி குயில் உன் குரலில் வழியாதோ கீதம்… ஆண் : ஆயுள் வரை… நீயே கதி… தேயாதடி என் வான்மதி கோதை கொலுசுகள் ஓசை… கேட்டே பெருகுதே ஆசை… ஆண் : தாய் கண்ட பாரம்… ஈரைந்து மாதம்… நாம் கொண்ட காதல் தாங்காது வேதம் வேறேதும் வேண்டாம்… கை சேரு போதும் ஆண் : ஓரவிழி… நூறு மொழி… உன் அழகில் ஒளிராதோ காலை… ஈர இதழ்… காது மடல்… அத்தனையும் விழுங்காதே ஆளை… ஆண் : கூந்தல் முதல் பாதம் வரை நீ சூடிட்ட நானே நகை.. தீரும் கனக்கரியம்மால்… மேலும் கொடுத்திடும் காதல்… ஆண் : அன்பே உன் அன்னை நீ காட்டு கொஞ்சம் ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம் என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம் ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா.. நீயே என் காதல் வெண்பா அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா நீயே என் காதல் வெண்பா