← Back

Thean Unnum Vandu Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female : Thaen unnum vandu maamalarai kandu Thirinthalainthu paaduvathen reengaaram kondu Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo…. Poongodiyae nee solluvaai…. Male : Veenai inba naadham ezhunthidum vinotham Viralaadum vidham polavae…ae….ae…. Kaattrinilae thendral kaattrinilae Salasalakkum poongodiyae kelaai Pudhumai idhilthaan ennavo…oo…oo….oo… Pudhumai idhilthaan ennavo… Male : Meen nilavum vaanil venmathiyai kandu Yaen alaigal aaduvathum aanantham kondu Men kaattrae nee solluvaai…oo…oo….oo… Men kaattrae nee solluvaai… Female : Thaen unnum vandu maamalarai kandu Thirinthalainthu paaduvathen reengaaram kondu Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo…. Poongodiyae nee solluvaai…. Female : Kaana mayil nindru vaan mugilai kandu Kaliththaadum vidham polavae…ae….ae… Kalaiyidhuvae vaazhvin kalaiyidhuvae Kalakalenum melliya poongaattru Kaanaathathum yaaen vaazhvilae…oo….oo….oo….oo…. Kaanaathathum yaaen vaazhvilae… Both : kannodu kangal pesiya pinnaalae Kadhalinbam ariyaamal vaazhvathum yaeno Kalaimadhiyae nee solluvaai Female : Oo….oo….oo… Both : Kalaimadhiyae nee solluvaai Oo….oo….oo….oo….oo….oo….oo….
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ……ஓ…..ஓ……ஓ….. பூங்கொடியே நீ சொல்லுவாய் ஆண் : வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம் விரலாடும் விதம் போலவே…..ஏ…..ஏ…. காற்றினிலே தென்றல் காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய் புதுமை இதில்தான் என்னவோ….ஓ……ஓ….ஓ….. புதுமை இதில்தான் என்னவோ ஆண் : மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு மென்காற்றே நீ சொல்லுவாய்…..ஓ……ஓ….ஓ….. மென்காற்றே நீ சொல்லுவாய் பெண் : தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ……ஓ…..ஓ……ஓ….. பூங்கொடியே நீ சொல்லுவாய் பெண் : கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு களித்தாடும் விதம் போலவே…..ஏ….ஏ….. கலையிதுவே வாழ்வின் கலையிதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே காணாததும் ஏன் வாழ்விலே……ஓ……ஓ….ஓ….. காணாததும் ஏன் வாழ்விலே…. இருவர் : கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ கலைமதியே நீ சொல்லுவாய் பெண் : ஓ……ஓ….ஓ….. இருவர் : கலைமதியே நீ சொல்லுவாய்….. ஓ……ஓ….ஓ…….ஓ……ஓ….ஓ…..