← Back

Kannilladha Paravai Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female : Kadavulukkae kannillaiyoo adhai Kannappar thaan koduthaaroo Ingae kannillaa manidhargalai Andha kadhavul thaan padaithaara Female : Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Female : Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Female : Mullai kodi alaiyudhthendru Thaerai thandhaan paari Oru pulli mayil kuliril vaada Porvai thandhan baegan Female : Neengal kooda vallal thaanae Enna seiya vendum Ingae irulil vaazhum makkalakku Oliyai vazhanga vendum Kan oliyai vazhanga vendum…aa…aa…aa…aa… Female : Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Female : Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Female : Vizhi oruvarkillai endra Pazhiyai mudhalil thudaipom Pudhu vin gnyaana koodam ondru Vinveliyil amaippom Female : Ellorum paarvai pettru Inba kadalil kulipom Ingae kurudar yaarum illai endru Pudhiya ulagam padaippom Puratchi vazhiyil nadappom aa aa aa Female : Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Female : Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கடவுளுக்கே கண்ணில்லையோ அதை கண்ணப்பர்தான் கொடுத்தாரோ இங்கே கண்ணில்லா மனிதர்களை அந்த கடவுள்தான் படைத்தாரா.. பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது பெண் : வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது.. பெண் : முல்லைக்கொடி அலையுதென்று தேரைத் தந்தான் பாரி ஒரு புள்ளிமயில் குளிரில் வாட போர்வை தந்தான் பேகன் பெண் : நீங்கள் கூட வள்ளல்தானே என்ன செய்ய வேண்டும் இங்கே இருளில் வாழும் மக்களுக்கு ஒளியை வழங்க வேண்டும் கண் ஒளியை வழங்க வேண்டும்…ஆஆஆஆ…. பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது.. பெண் : விழி ஒருவருக்கில்லை என்ற பழியை முதலில் துடைப்போம் புது விஞ்ஞான கூடம் ஒன்று விண்வெளியில் அமைப்போம் பெண் : எல்லோரும் பார்வை பெற்று இன்பக் கடலில் குளிப்போம் இங்கே குருடர் யாருமில்லை என்று புதிய உலகம் படைப்போம் புரட்சி வழியில் நடப்போம்..ஆஆஆ… பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..