← Back

Paapa Paattu Song Lyrics

Singer : Sid Sriram Music by : Girishh Gopalakrishnan Lyrics by : PA. Vijay Female : Haa..aaa..aaa..aaa..aaa…aa…haa..aa..(2) Ha..aaa..aa..aaa..(2) Haa…aa..aa..aaa..aaa… Male : Va vennilavae vaadatha poovae En vaazhvil meendum enai eendra thaayae Male : Kannodu imaiyai sugamana sumaiyai Iru kaiyil yendhi thaalattuvenae Male : Kaatrodu thalaikodhi nadhiyodu thavazhnthu Uyirodu uyiraaga uravaadum azhagae Paniyodu vilayadi malar oonjalaadi Tharai vandhu tamizh pesum Irukkaal vennilavae Male : Siragaaga unnai naan yendhi selven Sinungaamal unnai naan paarthu kolven Male : Oru kodi inbangal Unai paartha nodiyil Naan vaazhum naal mattum Nee endhan madiyil Unai eentra pozhuthinghu Kadavul than mugam paartha poluthu Un paatham thozhuthu Male : Aarariraro …..(3) Aarariro .. Aarariraro aarariro… Male : Ellorkkum ingae Mugamoodi vaazhkai Kannae un mugam pola Nijam yedhu Ulagathin oosai ooyadhu kanne En thozhil thalai saaindhu Nee thoongu Innum innum nedumthooram sendraal Anbennum oor seralaam Ponnum porulum thedatha uravai Avvooril nee kaanalaam Male : Un perai sonnal Elloorkum thannal Idhayathin kathavondru Anbodu thirakattum Azhagae amudhae en uyire Male : Aarariraro…. (3) Aarariro Aarariraro aarariro…. (2)
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..ஆ…..(2) ஹா…ஆஅ..ஆஆ…ஆஅ….(2) ஹா..ஆஆ..ஆஅ..ஆஆஆ..ஆஅ… ஆண் : வா வெண்ணிலாவே வாடாத பூவே என் வாழ்வில் மீண்டும் எனை ஈன்ற தாயே ஆண் : கண்ணோடு இமையாய் சுகமான சுமையாய் இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே ஆண் : காற்றோடு தலை கோதி நதியோடு தவழ்ந்து உயிரோடு உயிராக உறவாடும் அழகே பனியோடு விளையாடி மலர் ஊஞ்சலாடி தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே சிறகாக உன்னை நான் ஏந்தி செல்வேன் சிணுங்காமல் உன்னை நான் பார்த்து கொள்வேன் ஆண் : ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில் நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில் உனை ஈன்ற பொழுதிங்கு கடவுள் தன் முகம் பார்த்த பொழுது உன் பாதம் தொழுது ஆண் : ஆராரிராரோ …(3) ஆராரிரோ ஆராரிராரோ ஆராரிரோ.. ஆண் : எல்லோர்க்கும் இங்கே முகமூடி வாழ்க்கை கண்ணே உன் முகம் போல நிஜம் ஏது உலகத்தின் ஓசை ஓயாது கண்ணே என் தோளில் தலை சாய்ந்து நீ தூங்கு இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால் அன்பென்னும் ஊர் சேரலாம் பொன்னும் பொருளும் தேடாத உறவை அவ்வூரில் நீ காணலாம் ஆண் : உன் பேரை சொன்னால் எல்லோர்க்கும் தன்னால் இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும் அழகே அமுதே என் உயிரே ஆண் : ஆராரிராரோ… (3) ஆராரிரோ ஆராரிராரோ ஆராரிரோ… (2)