← Back

Alai Meethu Thadumaruthe Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Ilayaraja Both : Aa… aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa.. Aa… aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa. Male : Alai meedhu thadumaarudhae Siru odam Alai meedhu thadumaarudhae Siru odam Sumai thaangaamalae karai thaedum Sendru serum varai ival paavam paavam Male : Alai meedhu thadumaarudhae Siru odam Male : Kannil innum sindha kanneer illai Yedho konjam inimai Female : Pennai pennaai kaanum kaalam illai Podhum podhum thanimai Male : Pillai ennum kodi mullai kan valara Illai illai kavalai Female : Aa… indha naesam sugam aagumae Ival vaazhkkai niram maarumae Male : Endraalum kannoram or sogamae Female : Alai meedhu thadumaarudhae Siru odam Alai meedhu thadumaarudhae Siru odam Sumai thaangaamalae karai thaedum Sendru serum varai ival paavam paavam Female : Alai meedhu thadumaarudhae Siru odam Female : Jannal engum kangal paarkkindradhae Yedho solli chirikkum Male : Dharmam pesum indha oor ulladhae Saagum munbae erikkum Female : Thaanaai yeni tharum melae yera vidum Meendum yeri parikkum Male : Aa… thadumaarum ingu nyaayangal Idhanaal thaan pala kaayangal Female : Kanneeril thallaadum Penn dheepangal Female : Alai meedhu thadumaarudhae Siru odam Male : Alai meedhu thadumaarudhae Siru odam Female : Sumai thaangaamalae karai thaedum Male : Sendru serum varai ival paavam paavam Female : Alai meedhu thadumaarudhae Siru odam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா இருவர் : ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ… ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ… ஆண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் சுமை தாங்காமலே கரை தேடும் சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம் ஆண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் ஆண் : கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை ஏதோ கொஞ்சம் இனிமை பெண் : பெண்ணை பெண்ணாய்க் காணும் காலமில்லை போதும் போதும் தனிமை ஆண் : பிள்ளை என்னும் கொடி முல்லை கண் வளர இல்லை இல்லை கவலை பெண் : ஆ….இந்த நேசம் சுகம் ஆகுமே இவள் வாழ்க்கை நிறம் மாறுமே ஆண் : என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே பெண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் சுமை தாங்காமலே கரை தேடும் சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம் பெண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் பெண் : ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே ஏதோ சொல்லிச் சிரிக்கும்…. ஆண் : தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே சாகும் முன்பே எரிக்கும்…. பெண் : தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும் மீண்டும் ஏணி பறிக்கும் ஆண் : ஆஅ……தடுமாறும் இங்கு நியாயங்கள் இதனால்தான் பல காயங்கள் பெண் : கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள் பெண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் ஆண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் பெண் : சுமை தாங்காமலே கரை தேடும் ஆண் : சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம் பெண் : அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்