← Back

Kadavul Paadhi Song Lyrics

Singer : Kamal Haasan Music by : Shankar-Eshaan-Loy Male : Hoo…haa…huuu huuu Haha hahahaha….. Male : Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Velliyae mirugam ullae kadavul Vilanga mudiyaa kavithai naan Male : Mirugam kondru mirugam kondru Kadavul valarkka paarkkindren Aanaal… Kadavul kondru unavaai thindru Mirugam mattum valargirathae Male : Nandhakumaraa ..nandhakumaraa, Naalai mirugam kolvaaiyaa Mirugam kondra echam kondu Meendum kadavul seivaayaa Male : Koorangil irunthu manithan endraal Manidhan niraiyaa ganippaanaa Miruga jaathiyil pirantha manithaa Deiva jothaiyil kalappaayaa Haa Male : Ha haha..huhahaahah…. Male : Nandhakumaraa… Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Velliyae mirugam ullae kadavul Vilanga mudiyaa kavithai naan Male : Mirugam kondru mirugam kondru Kadavul valarkka paarkkindren Kadavul kondru unavaai thindru Mirugam mattum valargirathae Male : Heyyy..hey hey hey…..eyyyyyyyyy Nandhaa…. Heyyy..hey hey hey…..eyyyyyyyyy Male : Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Kaattril yeri malaiyil aadi Kavithai paadum paravai naan Chorus : …………………………. Male : Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Kaattril yeri malaiyil aadi Kavithai paadum paravai naan Male : Ovvoru thuliyum ovvoru thuliyum Uyiril vergal kulirgirathae Ellaam thuliyil kulirumbodhum Iru thuli mattum sudugirathae Male : Nandhakumaaraa nandhakumaaraa Malai neer sudaathu theriyaathaa? Kannam valigira kanneer thulithaan Venneer thuli yena arivaayaa Male : Sutta malaiyum sudatha malaiyum Ondraai kandavan neethaanae Kanneer malaiyil thaneer malaiyil Kulikka vaithavan neethaanae… Yeah…
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : ஹோ ஹா ஹு ஹு ஹாஹா ஹாஹா ஹாஹா ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான் ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன் ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மிருகம் கொல்வாயா மிருகம் கொன்ற எச்சம் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா ஆண் : குரங்கில் இருந்து மனிதன் என்றால் மனிதன் நிறையா கணிப்பானா மிருக ஜாதியில் பிறந்த மனிதா தெய்வ ஜோதியில் கலப்பாயா ஹா ஆண் : ஹா ஹாஹா ஹுஹாஹாஹா ஆண் : நந்தகுமாரா கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான் ஆண் : மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன் ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே ஆண் : ஹே ஹே ஹே ஹே…….. நந்தா ஹே ஹே ஹே ஹே….. ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் காற்றில் ஏறி மலையில் ஆடி கவிதை பாடும் பறவை நான் குழு : ……………………………….. ஆண் : கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் காற்றில் ஏறி மலையில் ஆடி கவிதை பாடும் பறவை நான் ஆண் : ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும் உயிரில் வேர்கள் குளிர்கிறதே எல்லாம் துளியில் குளிரும் போதும் இரு துளி மட்டும் சுடுகிறதே ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா மழை நீர் சுடாது தெரியாதா கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான் வெந்நீர் துளி என அறிவாயா ஆண் : சுட்ட மழையும் சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே கண்ணீர் மழையில் தண்ணீர் மழையில் குளிக்க வைத்தவன் நீதானே யே