← Back

Vidu Kathaiya Song Lyrics

Singer : Hariharan Music by : A. R. Rahman Male : Vidu kathaiya intha vazhkkai Vidaitharuvar yaro Male : Enathu kai ennai adipathuvo Enathu viral kannai kedupathuvo Azhuthu ariyatha en kangal Aaru kulamaga maruvatho Male : Yen endru ketkavum nathiyillai Ezhaiyin neethikku kannundu parvaiyillai {Pasuvinai pambendru satchi solla mudiyum Kambinil visham enna karakkava mudiyum} (2) Male : Udambil vazhinthodum Uthiram unaikketkum Nan seitha theengu enna Nan seitha theengu enna Male : Vidu kathaiya intha vazhkkai Vidaitharuvar yaro Male : Vanthu vizhugindra mazhaithuligal Entha idam serum yar kandar Manithar kondadum uravugalo Entha manam serum yar kandar Male : Malai thanil thondruthu Gangai nathi Athu kadal sendru servadhu kalan vithi {Ivanukku ival endru ezhuthiya kanakku Kanakkugal puriyamal kanavukkul vazhakku} (2) Male : Uravin marattam Urimai porattam Irandum theervatheppo Irandum theervatheppo Male : Vidu kathaiya intha vazhkkai Vidaitharuvar yaro Male : Unathu rajangam ithuthanae Othungakkoodathu nallavanae Thondugal seiya nee irunthal Thollai nerathu thooyavanae Male : Kaigalil ponnalli nee koduthai Indru kangalil kanneer en koduthai {Kaviyangal unai paada kathirukkum pozhuthu Kaviyudai nee kondaal ennavagum manathu} (2) Male : Vazhvai nee thedi vadakkae nee ponal Nangal povathengae Nangal povathengae
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை {பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்} (2) ஆண் : உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும் நான் செய்த தீங்கு என்ன நான் செய்த தீங்கு என்ன ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார் மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம் சேரும் யார் கண்டார் ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி {இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு} (2) ஆண் : உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம் இரண்டும் தீர்வதெப்போ இரண்டும் தீர்வதெப்போ ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே தொண்டுகள் செய்ய நீ இருந்தால் தொல்லை நேராது தூயவனே ஆண் : கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய் ஆண் : {காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது} (2) ஆண் : வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் போவதெங்கே நாங்கள் போவதெங்கே