← Back

Aandavane Kann Thirandhu Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Male : Aandavanae kann thiranthu konjam paarungal Aandavanae kann thiranthu konjam paarungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Adhigaara maamiyaarin attakaasangal Adhigaara maamiyaarin attakaasangal Aval agampaava naavinilae melathaalangal Dowry melathaalangal Male : Aandavanae kann thiranthu konjam paarungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Male : Marumagalin porul varavil kavanam vaikkindraal Thaanum marumagalaai vantha naalai maranthu pogiraal Marumagalin porul varavil kavanam vaikkindraal Thaanum marumagalaai vantha naalai maranthu pogiraal Male : Oru maganai sumanthathaalae ulagai ketkiraal Ivalae than magalin thirumanaththil kanneer vadikkiraal Ingu kanneer vadikkiraal Male : Aandavanae kann thiranthu konjam paarungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Male : Kulamagalai karam pidikka kooli ketkkiraan Thanga thirumagalin meniyilae ponnai paarkkiraan Kulamagalai karam pidikka kooli ketkkiraan Thanga thirumagalin meniyilae ponnai paarkkiraan Male : Santhathigal tharum thunaiyai niruththu paarkkiraan Muchchanthiyilae vesiyidam veesi erigiraan Kaasai veesi erigiraan Male : Karuvinilae iruvarukkum paththu maadhamae Mana uravinilae anaivarukkum varkka pedhamae Aadavarae uyarvu endru enna sattamo Antha aadavarai pettra inam enna mattamo Yaen adimai pattamo…. Male : Aandavanae kann thiranthu konjam paarungal Engal kalyaana veedugalin kadhaiyai kelungal Soga kadhaiyai kelungal Soga kadhaiyai kelungal
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் அதிகார மாமியாரின் அட்டகாசங்கள் அதிகார மாமியாரின் அட்டகாசங்கள் அவள் அகம்பாவ நாவினிலே மேளதாளங்கள் டெளரி மேளதாளங்கள் ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் ஆண் : மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள் தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள் மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள் தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள் ஆண் : ஒரு மகனை சுமந்ததாலே உலகை கேட்கிறாள் இவளே தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் வடிக்கிறாள் இங்கு கண்ணீர் வடிக்கிறாள் ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் ஆண் : குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான் தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான் குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான் தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான் ஆண் : சந்ததிகள் தரும் துணையை நிறுத்து பார்க்கிறான் முச்சந்தியிலே வேசியிடம் வீசி எறிகிறான் காசை வீசி எறிகிறான் ஆண் : கருவினிலே இருவருக்கும் பத்து மாதமே மண உறவினிலே அனைவர்க்கும் வர்க்க பேதமே ஆடவரே உயர்வு என்று என்ன சட்டமோ அந்த ஆடவரை பெற்ற இனம் என்ன மட்டமோ ஏன் அடிமை பட்டமோ….. ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள் எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் சோக கதையைக் கேளுங்கள்…… சோகக் கதையைக் கேளுங்கள்….