← Back

Irandu Kiligal Sernthu Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Irandu kiligal saernthu nadaththum Inba kadhal naadagam Oo….indru thodangum kaaviyam Female : Irandu kiligal saernthu nadaththum Inba kadhal naadagam Oo….indru thodangum kaaviyam Female : Thiranda paruvm aadi paadum Sittu kuruvi oviyam Oo….thiranda paruvam aadi paadum Sittu kuruvi oviyam Serum sugangal aayiram Female : Irandu kiligal saernthu nadaththum Inba kadhal naadagam Oo….indru thodangum kaaviyam Female : Iraivan potta vithiyin Kottil idhuvum oru veedu Thalaivi ingae thunaivan engae Naduvil oru kodu Female : Ingae aadal paadal sarasa koodal Nadana pennodu Amma idhuvum panpaadu Amma idhuvum panpaadu Female : Thanga padhumai angam muzhuthum thazhuvum kairasi Thazhuvi thazhuvi thannai maranthu mayakkum magarasi Ingae koodal illai shanthi illai Kungumam poosi amma paavam ival rasi Amma paavam ival rasi Female : Ulla poruththam udalum porutham Ondru saernthaarkal urakkam indri Vidiya vidiya magizhnthu vaazhnthaargal Ingae thaali ondrae intha kazhuththu Thaanga vaiththaargal paavam yaenga vaiththaargal
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும் இன்பக் காதல் நாடகம் ஓ….இன்று தொடங்கும் காவியம்.. பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும் இன்பக் காதல் நாடகம் ஓ….இன்று தொடங்கும் காவியம்.. பெண் : திரண்ட பருவம் ஆடிப் பாடும் சிட்டுக் குருவி ஓவியம் ஓ…..திரண்ட பருவம் ஆடிப் பாடும் சிட்டுக் குருவி ஓவியம் சேரும் சுகங்கள் ஆயிரம்……. பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும் இன்பக் காதல் நாடகம் ஓ….இன்று தொடங்கும் காவியம்.. பெண் : இறைவன் போட்ட விதியின் கோட்டில் இதுவும் ஒரு வீடு தலைவி இங்கே துணைவன் எங்கே நடுவில் ஒரு கோடு பெண் : இங்கே ஆடல் பாடல் சரஸக் கூடல் நடனப் பெண்ணோடு…. அம்மா இதுவும் பண்பாடு…….. அம்மா இதுவும் பண்பாடு…….. பெண் : தங்கப் பதுமை அங்கம் முழுதும் தழுவும் கைராசி தழுவி தழுவி தன்னை மறந்து மயக்கும் மகராசி இங்கே கூடல் இல்லை சாந்தி இல்லை குங்குமம் பூசி அம்மா பாவம் இவள் ராசி…… அம்மா பாவம் இவள் ராசி….. பெண் : உள்ளப் பொருத்தம் உடலும் பொருத்தம் ஒன்று சேர்ந்தார்கள் உறக்கம் இன்றி விடிய விடிய மகிழ்ந்து வாழ்ந்தார்கள் இங்கே தாலி ஒன்றே இந்தக் கழுத்து தாங்க வைத்தார்கள் பாவம் ஏங்க வைத்தார்கள்