← Back

The Life Of Ram Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Govind Vasantha Male : Karai vantha piragae…ae…. Pidikuthu kadalai…ee… Narai vantha piragae….ae…. Puriyuthu ulagai….ee……. Male : Netrin inbangal yaavum koodiyae Indrai ippothai artham aakkuthae Indrin ippothin inbam yaavumae Naalai orr artham kaatumae Male : Vaazha en vazhvai vazhavae Thaazhamal melae pogiren Theeraa ul ootrai theendavae Indrae ingae meelgiren Indrae ingae aazhgiren Male : Hey yaarapol Naan ennai paarkiren Yedhum illamalae iyalbaai Sudar pol thelivaai Male : Naanae illatha Aazhathil naan vaazhgiren Kannadiyaai piranthae Kaangindra ellamum naan aagiren Male : Iru kaalin idayilae Urasum poonaiyaai Vazhkai pothum adada Ethir kaanum yaavumae Theenda thoondum azhaga…aa… Male : Naanae naanai iruppen Naalil pooraai vasippen Polae vazhnthae salikkum Vazhvai marukkiren Vaagai vaagai vazhgiren Paagai paagai aagiren Male : Tho kaatrodu Vallooru thaan poguthae Paadhai illamalae azhagaai Nigazhae athuvai Male : Neerin aazhathil Pogindra kal polavae Oosai ellam thuranthae Kaangindra katchikkul naan moozhginen Male : Thimileri kaalai mel Thoongum kaagamai Boomi meethu iruppen Puvi pogum pokkil kai korthu Naanum nadappen Male : Yedho eagam eluthae Aaha aazham tharuthae Thaai pol vazhum ganamae Aaro paaduthae..ae…. Aaro aarirariro..ooo Aaro aarirariro..ooo… Male : Karai vantha piragae…ae…. Pidikuthu kadalai….ee….. Narai vantha piragae…ae…. Puriyuthu ulagai….ee….. Male : Netrin inbangal yaavum koodiyae Indrai ippothai artham aakkuthae Indrin ippothin inbam yaavumae Naalai orr artham kaatumae Male : Thaanae thaanae nanae nae…ae… Thaanae thaanae nanae nae… Thaanae thaanae nanae nae…ae.. Thaanae thaanae nanae nae… Male : Thaanae thaanae nanae nae…ae… Thaanae thaanae nanae nae… Thaanae thaanae nanae nae…ae.. Thaanae….aa…..aa….
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா ஆண் : கரை வந்த பிறகே…. பிடிக்குது கடலை…. நரை வந்த பிறகே…. புரியுது உலகை…. ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண் : வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன் ஆண் : ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் ஆண் : நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் ஆண் : இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா….. ஆண் : நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் ஆண் : தோ…காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் ஆண் : நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் ஆண் : திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஆண் : ஏதோ ஏகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே…. ஆரோ ஆரிராரிரோ….. ஆரோ ஆரிராரிரோ… ஆண் : கரை வந்த பிறகே….. பிடிக்குது கடலை… நரை வந்த பிறகே…. புரியுது உலகை….. ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண் : தானே தானே னானே னே…. தானே தானே னானே னே…. தானே தானே னானே னே….. தானே தானே னானே னே…. ஆண் : தானே தானே னானே னே…. தானே தானே னானே னே…. தானே தானே னானே னே….. தானே தானே னானே னே…. தானே……ஆ….ஆ……