← Back

Idhu Unthan Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Idhu unthan veettu kilithaan Idhu unthan veettu kilithaan Koondil yaetri kurumbu seiyya Pazhaththai kandu pasiyai theerkka Paranthu vanthaenae… Paranthu vanthaenae… Female : Idhu unthan veettu kilithaan Idhu unthan veettu kilithaan Female : ………………. Female : Ragangal irukku pala vidhangal irukku Idhai sugangal unakku tharumo Intha radhiyai eduththu ungal madiyil anaiththu Inba kavithai padikka varavo Female : Pachai poongodi manjal maeni Thullum nenjam untha pakkam Siththam theernthida aasai vanthathu Engae ponathu engal vetkkam Female : …………………… Female : Idhu unthan veettu kilithaan Idhu unthan veettu kilithaan Female : Panaththai mathikkum sila idangal Irukku ivai kulaththil pirantha kiligal Enagal nadaththai ozhukkam panbai Mathikkum pazhakkam avai Padiththu kidaiththa vazhaigal Female : Kanni pennai kannil kandathum Jaadai seivathu puththi kedu Annai thanthai ennam polae Oru pennai paarththu kattupodu Female : Idhu unthan veettu kilithaan Koondil yaetri kurumbu seiyya Pazhaththai kandu pasiyai theerkka Paranthu vanthaenae… Paranthu vanthaenae…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் இது உந்தன் வீட்டுக் கிளிதான் கூண்டில் ஏற்றி குறும்பு செய்ய பழத்தைக் கண்டு பசியை தீர்க்க பறந்து வந்தேனே…… பறந்து வந்தேனே…… பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் இது உந்தன் வீட்டுக் கிளிதான் பெண் : ………………………… பெண் : ரகங்கள் இருக்கு பல விதங்கள் இருக்கு இதை சுகங்கள் உனக்கு தருமோ இந்த ரதியை எடுத்து உங்கள் மடியில் அணைத்து இன்பக் கவிதை படிக்க வரவோ பெண் : பச்சைப் பூங்கொடி மஞ்சள் மேனி துள்ளும் நெஞ்சம் உந்தன் பக்கம் சித்தம் தீர்ந்திட ஆசை வந்தது எங்கே போனது எங்கள் வெட்கம் பெண் : …………………………. பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் இது உந்தன் வீட்டுக் கிளிதான் பெண் : பணத்தை மதிக்கும் சில இடங்கள் இருக்கு இவை குலத்தில் பிறந்த கிளிகள் எங்கள் நடத்தை ஒழுக்கம் பண்பை மதிக்கும் பழக்கம் அவை படித்து கிடைத்த வழிகள்…….. பெண் : கன்னிப் பெண்ணை கண்ணில் கண்டதும் ஜாடை செய்வது புத்திக் கேடு…. அன்னை தந்தை எண்ணம் போலே ஒரு பெண்ணைப் பார்த்து கட்டிப்போடு பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான் கூண்டில் ஏற்றி குறும்பு செய்ய பழத்தைக் கண்டு பசியை தீர்க்க பறந்து வந்தேனே…… பறந்து வந்தேனே……