← Back

Ezhaikkum Vazhvukkum Vegu Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari Music by : R. Sudharsanam Lyrics by : Kavi Rajagopal Female : Ezhaikkum vaazhvukkum veguthooraama Ezhaikkum vaazhvukkum veguthooraama Panam illaar endraalae ilakaarama Panam illaar endraalae ilakaarama Male : Soozhum vaazhvin karaiyoramaa Emmai thookki erivadhu muraiyaaguma Emmai thookki erivadhu muraiyaaguma Ezhaikkum vaazhvukkum veguthooraama Female : Panam iruppavarkkae inbam sondhamaa Panam iruppavarkkae inbam sondhamaa Namm ilangkaadhal valarlaamal pogumaaa Male : Iruvarai pirithadhu needhiyoo Iruvarai pirithadhu needhiyoo Paaril eliyorgal vazhvadhendha thedhiyoo Female : Ezhaikkum vaazhvukkum veguthooraama Panam illaar endraalae ilakaarama Panam illaar endraalae ilakaarama Female : Kulaiyodu pazhutha Malai vaazhai pondra Kudumbam alai modhi sidhariyadhae Male : Malai paambum pollaa valloorum Ennai vaazhamudiyaamal virattiyadhae Ezhaikkum vaazhvukkum veguthooraama Female : Ezhamaiyai iraivaa neekividu Illai engalin uyirai pokkividu Male : Yeikkum valiyorai thookilidu Indrae inbamaai engalai vaazhavidu Indrae inbamaai engalai vaazhavidu Both : Ezhaikkum vaazhvukkum veguthooraama Panam illaar endraalae ilakaarama Panam illaar endraalae ilakaarama Ezhaikkum vaazhvukkum veguthooraama
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா ஆண் : சூழும் வாழ்வின் கரையோரமா எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா…. எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பெண் : பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா நம் இளங்காதல் வளராமல் போகுமா ஆண் : இருவரைப் பிரித்தது நீதியோ இருவரைப் பிரித்தது நீதியோ பாரில் எளியோர்கள் வாழ்வதெந்தத் தேதியோ பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பெண் : குலையோடு பழுத்த மலை வாழை போன்ற குடும்பம் அலைமோதி சிதறியதே ஆண் : மலைப் பாம்பும் பொல்லா வல்லூறும் என்னை வாழமுடியாமல் விரட்டியதே ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பெண் : ஏழ்மையை இறைவா நீக்கிவிடு இல்லை எங்களின் உயிரைப் போக்கிவிடு ஆண் : ஏய்க்கும் வலியோரைத் தூக்கிலிடு இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு…. இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு…. இருவர் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா