← Back

Vidai Kodu Engal Naadae Song Lyrics

Singers : M. S. Vishwanathan, Balram, Febi Mani A. R. Reihana and Manikka Vinayagam Music by : A. R. Rahman Male : Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Male : Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo…. Male : Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Chorus : Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo…. Male : Kandhal aanalum thaai madipol Oru sugam varumaa.. varuma… Kandhal aanalum thaai madipol Oru sugam varumaa.. varuma… Male : Sorgam sendralum sondha oor pol Sudhandiram varumaa… varuma… Kan thirandha desam angae Kan moodum desam yengae Kan thirandha desam angae Kan moodum desam yengae Male : Pirivom nadhigalae Pizhithaal varugirom Meendum thaaygam Azhaithaal varugirom Kanneer thiraiyil pirandha mannai Kadaisiyaga paarkindrom Male : Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Chorus : Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo…. Female : Engal sangeetham pillaiyin Azhugaiyilae tholaithom Engal ilamthingal vedi kundu Pugaiyilae pudhaithom Male : Munniravil malaril kidanthom Pinniravil mullil kizhinthom Kadal neer paravaigaal Irundhal sandhipom Vanamae malaigalae Vaazhndhal sandhipom Thalaiyil koncham nenjil adhigam Sumaigal sumandhu pogindrom Male : Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Chorus : Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo….
பாடகர்கள் : எம். எஸ்.விஸ்வநாதன், பல்ராம், பெபிமணி, ஏ. ஆர். ரெய்ஹானா மற்றும் மாணிக்க வினாயகம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா ஆண் : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்..ஓஹோ.. ஆண் : கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா… வருமா… கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா… வருமா… ஆண் : சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா… வருமா… கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே.. கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே… ஆண் : பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம் ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ…. பெண் : எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம் எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம் ஆண் : முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம் கடல் நீர் பறவைகள் இருந்தால் சந்திப்போம் வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம் தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம் ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ….