← Back

Nee Ennai Santhithathu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Nee ennai santhiththathundo Thaen en pol thiththathundo Nee ennai santhiththathundo Thaen en pol thiththathundo Female : Anantha mogam paalaabishegam Angangalellaam singaara raagam Female : Naan kettu pazhakkamillai Nee kettaal thayakkamillai Naan kettu pazhakkamillai Nee kettaal thayakkamillai Irandu macham udhattil undu Nerungi vanthaal unakkum undu Female : Nee ennai santhiththathundo Thaen en pol thiththathundo Chorus : ………………. Female : Iravu nilaavil uravennum thaeril Iruvarin yogam sugamenum yaagam Kanigalin inbam anilariyaathaa Ilamai irunthum idhu puriyaathaa Female : Naan sollum manmatha leelai Vaan thnath manthiramaalai Thiranda nenjam…aa….mirandathillai….aa… Pirinthu sendraal irandumillai Female : Nee ennai santhiththathundo Thaen en pol thiththathundo Chorus : ………………… Female : Azhagiya thangam thavazhuthu ingu Aruginil vanthaal unakkoru pangu Nadhi varumpothu anaiyidalaamaa Radhi varumpothu adhai vidalaamaa Female : Ponmaalai thoduththa chendu Male : Aahaa Female : Pen enum vaazhai thandu Male : Oho Female : Kulunguthingae…aaha mayanguthingae….ohho Thudikkuthingae ninaippathenga………… Female : Nee ennai santhiththathundo Thaen en pol thiththathundo
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ தேன் என் போல் தித்தித்ததுண்டோ நீ என்னை சந்தித்ததுண்டோ தேன் என் போல் தித்தித்ததுண்டோ பெண் : ஆனந்த மோகம் பாலாபிஷேகம் அங்கங்களெல்லாம் சிங்கார ராகம் பெண் : நான் கேட்டு பழக்கமில்லை நீ கேட்டால் தயக்கமில்லை நான் கேட்டு பழக்கமில்லை நீ கேட்டால் தயக்கமில்லை இரண்டு மச்சம் உதட்டில் உண்டு நெருங்கி வந்தால் உனக்கும் உண்டு பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ தேன் என் போல் தித்தித்ததுண்டோ குழு : ………………………………. பெண் : இரவு நிலாவில் உறவெனும் தேரில் இருவரின் யோகம் சுகமெனும் யாகம் கனிகளின் இன்பம் அணிலறியாதா இளமை இருந்தும் இது புரியாதா பெண் : நான் சொல்லும் மன்மத லீலை வான் தந்த மந்திரமாலை திரண்ட நெஞ்சம்…..ஆ…..மிரண்டதில்லை…ஆ…. பிரிந்து சென்றால் இரண்டுமில்லை பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ தேன் என் போல் தித்தித்ததுண்டோ குழு : ………………………………. பெண் : அழகிய தங்கம் தவழுது இங்கு அருகினில் வந்தால் உனக்கொரு பங்கு நதி வரும்போது அணையிடலாமா ரதி வரும்போது அதை விடலாமா பெண் : பொன்மாலை தொடுத்த செண்டு ஆண் : ஆஹா பெண் : பெண் எனும் வாழைத்தண்டு ஆண் : ஓஹோ பெண் : குலுங்குதிங்கே…ஆஹ மயங்குதிங்கே…ஓஹ்ஹோ துடிக்குதிங்கே நினைப்பதெங்கே பெண் : நீ என்னை சந்தித்ததுண்டோ தேன் என் போல் தித்தித்ததுண்டோ