← Back

Kanaa Kandaen Song Lyrics

Singer : Hari Charan Music by : Anil Srinivasan Lyrics by : Vairamuthu Male : Kanakanden pen paavaai .. Kanaa kanden Nilakaala iravil thendral Neendhi varum poluthil Kanaa..aaa kanden Male : Valar mulai pendir Varisai thataendhi vara Thalar nadai maadhar Thaangi vazhiyura Valar pirai pennaal Vandhen idam pidikka Kilar manam kalikolla Kanaa…kanden penpaavaai… Male : Vaazhai ilam pachai Variththor aadaiyilae Thaazhai narunguzhal Thaiyalaal veetrirukka Ezhai oruvan ezhukodi Pon konda Pezhai kandathu pol Pithuttren pen paavaai…. Male : Uyirae enbaeno Ullathil ver konda Payirae enbaeno Pasi kandaan nirai seidha Vayirae enbaeno Vaazhvinai kattuvitha Kayirae enabenoo Karuthazhindhen pen paavaai… Kanaaa kanden pen paavaai… Male : Enganam munnor Iyattri vagutharo Anganam medai Amaitha pandharkeezh Enganam vaazhatholi Elundhu nalam parappa Kanganam katta Kanaa kanden pen paavaai…..pavaaaaiiii.. Pen paaavaaii.. Male : Vaanpoottum villin Vanna thiruvudaiyaal Thaen poottum idhazhaal Deiva thirukkazhuthil Poonpootti seidha Porsaradu nanyaendhi Naanpotta kanakandaen Nallaai ….pen paavaai Male : Kanaa kanden pen paavaai…..pavaaaaiiii.. Pen paaavaaii..
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய் கனாக்கண்டேன் நிலாக்கால இரவில் தென்றல் நீந்திவரும் பொழுதில் கனாக்….கண்டேன் ஆண் : வளர்முலைப் பெண்டிர் வரிசைத்தட் டேந்திவர தளர்நடை மாதர் தாங்கி வழியூர வளர்பிறைப் பெண்ணாள் வந்தென் இடம்பிடிக்கக் கிளர்மனம் களிகொள்ளக் கனாக்கண்டேன்… பெண்பாவாய் ஆண் : வாழை யிளம்பச்சை வரித்ததோர் ஆடையிலே தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க ஏழை ஒருவன் எழுகோடிப் பொன்கொண்ட பேழை கண்டதுபோல் பித்துற்றேன் பெண்பாவாய் ஆண் : உயிரே என்பேனோ உள்ளத்தில் வேர்கொண்ட பயிரே என்பேனோ பசிகண்டான் நிறைசெய்த வயிறே என்பேனோ வாழ்வினைக் கட்டுவித்த கயிறே என்பேனோ கருத்தழிந்தேன் பெண்பாவாய் ஆண் : எங்ஙனம் முன்னோர் இயற்றி வகுத்தாரோ அங்ஙனம் மேடை அமைத்த பந்தற்கீழ் எங்கணும் வாழ்த்தொலி எழுந்து நலம்பரப்பக் கங்கணம் கட்டக் கனாக்கண்டேன் பெண்பாவாய் ஆண் : வான்பூட்டும் வில்லின் வண்ணத் திருவுடையாள் தேன்பூட்டும் இதழாள் தெய்வத் திருக்கழுத்தில் பூண்பூட்டிச் செய்த பொற்சரடு நானேந்தி நாண்பூட்டக் கனாக்கண்டேன் நல்லாய் பெண்பாவாய் ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய்..பாவாய் பெண்பாவாய்….