← Back

Oxygen Song Lyrics

Singers : Hip Hop Thamizha and Sudharshan Ashok Music by : Hip Hop Thamizha Male : Oxygen thanthaayae Munnoru pozhudhinilae Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae Male : Odum nadhiyil ilaiyai polae Naatkal nagargirathae Ilaiyin meedhu nilavin oliyo Soodaai pozhigirathae Male : Kalaabamae enai keerinaai Mazhai meghamae Pizhai aaginaai Male : En vaasalil suvar aaginaai Meendum oru thoondil Idavaa… thondrinaai Male : Oxygen thanthaayae Munnoru pozhudhinilae..ehh… Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae Ponaai edhanaalae Ponaai edhanaalae Edhanaalae ..ohooo…..hmmmm Male : Ula ula kalloori mannilaa Un theendal ovvondrum Enai koiyum thendralaa Male : Muyal idai Thirai neengum podhellaam Siru mogam vandhadhaai Selai cindrellaa Male : Vettaveli vaanam engum Vatta mugam kanden kanden Natta nadu nenjil nenjil Yutham idum kadhal konden Male : Kaalam adhu theerndhaal kooda Kaadhal adhu vazhum endren Paavai ne piriyum podhu Paadhiyil kanavai kondren Male : Oxygen thanthaayae Munnoru pozhudhinilae..ehh… Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae Female : Aahaaaaaa…aaaaaa… Aahaaaaaa…aaaaaa… Male : Thaniyaaga nadamaadum Pidivaadham unadhu Nizhalodum urasaadha Thanmaanam enadhu Male : Edai illaa porul alla Adi kaadhal manadhu Agalaadha oru ninaivu Adhu malaiyin alavu Male : Aalattra araiyil kooda Aniyaaya thooram thollai Un idhayam ariyadhazhagae En idhayam ezhudhum sollai Male : Mounamaai thooram nindraal Madiyilae baaram illai Meendum oru kadhal seiyya Kangalil eeram illai Male : Oxygen thanthaayae Munnoru pozhudhinilae Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae Male : Odum nadhiyil ilaiyai polae Naatkal nagargirathae Ilaiyin meedhu nilavin oliyo Soodaai pozhigirathae Male : Kalaabamae enai keerinaai Mazhai meghamae Pizhai aaginaai Male : En vaasalil suvar aaginaai Meendum oru thoondil Idavaa… thondrinaai Chorus : Hmmmmm…mmmmm..mmm Hmmmmm…mmmmm..mmm
பாடகா்கள் : ஹிப் ஹாப் தமிழா, சுதர்சன் அசோக் இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே ஆண் : ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே ஆண் : கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய் ஆண் : என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய் ஆண் : ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே போனாய் எதனாலே போனாய் எதனாலே எதனாலே ஓஹோ ஹ்ம்ம் ஆண் : உலா உலா கல்லூரி மண்ணிலா உன் தீண்டல் ஒவ்வொன்றும் எனை கொய்யும் தென்றலா ஆண் : முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம் சிறு மோகம் வந்ததாய் சேலை சிண்ட்ரெல்லா ஆண் : வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன் நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன் ஆண் : காலம் அது தீர்ந்தால் கூட காதல் அது வாழும் என்றேன் பாவை நீ பிரியும் போது பாதியில் கனவை கொன்றேன் ஆண் : ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே பெண் : ………………………….. ஆண் : தனியாக நடமாடும் பிடிவாதம் உனது நிழலோடும் உரசாத தன்மானம் எனது ஆண் : எடை இல்லா பொருளல்ல அடி காதல் மனது அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு ஆண் : ஆளற்ற அறையில் கூட அநியாய தூரம் தொல்லை உன் இதயம் அறியாதழகே என் இதயம் எழுதும் சொல்லை ஆண் : மௌனமாய் தூரம் நின்றால் மடியிலே பாரம் இல்லை மீண்டும் ஒரு காதல்செய்ய கண்களில் ஈரம் இல்லை ஆண் : ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே ஆண் : ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே ஆண் : கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய் ஆண் : என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்