← Back

Avan Thotatha Pookkal Song Lyrics

Singers : T. M. Soundararajan, P. Suseela and T. L. Maharajan Music by : Shankar Ganesh Female : Avan thodaatha pookkal Indru vaadi vittathu Aval moga moochchu Indru sendru theeyai suttathu Female : Kannil thengum viragam Ingae nagara marukkum naragam Iruvarukkum idaiyil Oru soga megam ulavum Male : Mangala selvi kungumam andru Anniya vaerviyaal azhinthu ponathu Saainthu kidantha santhana maalaiyai Kurangugal moondru kollai kondana Female : Paayil kidantha paari jaadhaththai Naaigal moondru nasukki nugarnthana Male : Niyaayam ketta yaezhai puliyai Thindru theerththathu neruppu Yaarthaan intha kodumaikku poruppu Male : Ivargal vinai vithaiththa kayavargal Vaetti kattiya neruppugal Female : Ivargal karppai thulaikkum ambugal Kannai koththum paambugal Male : Indru ivargalai vittu vaiththirunthaal Dharmam ingae tharkolai puriyum Azhutha makkalae ezhunthu nillungal Theeyai eduththu theerpezhuthungal Male : Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal Nimirnthu nillungal niyaayam kaelungal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : அவன் தொடாத பூக்கள் இன்று வாடி விட்டது அவள் மோக மூச்சு இன்று சென்று தீயை சுட்டது பெண் : கண்ணில் தேங்கும் விரகம் இங்கே நகர மறுக்கும் நரகம் இருவருக்கும் இடையில் ஒரு சோக மேகம் உலவும்…. ஆண் : மங்கல செல்வி குங்குமம் அன்று அந்நிய வேர்வையால் அழிந்து போனது சாய்ந்து கிடந்த சந்தன மாலையை குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன பெண் : பாயில் கிடந்த பாரிஜாதத்தை நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன ஆண் : நியாயம் கேட்ட ஏழை புலியை தின்று தீர்த்தது நெருப்பு யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு ஆண் : இவர்கள் வினை விதைத்த கயவர்கள் வேட்டி கட்டிய நெருப்புகள் பெண் : இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள் கண்ணைக் கொத்தும் பாம்புகள் ஆண் : இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால் தர்மம் இங்கே தற்கொலை புரியும் அழுத மக்களே எழுந்து நில்லுங்கள் தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள் ஆண் : நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்