← Back

Yetramunna Yetram Song Lyrics

Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan Music by : G. Ramanathan Male : Yettramunnaa yettram Ahh…aaaa…aaaa…..aaa… Idhilae irukkudhu munnaettram Male : Ellaarum padupattaa aaa…aa…aa… Idhu inbam vilaiyum thottam Ellaarum padupattaa Idhu inbam vilaiyum thottam Male : Kinaththu neerai nilathukku thaan Eduththu tharum yettram Kilai vedikkum payirgalukku Uyarvalikkum oottam Male : Thandhanatthaanae Yaelaelo Thandhanatthaanae Yaelaelo Male : Erumbu pola varisaiyaaga Edhilum serndhu uzhaikkanum Iduppae valaiyaa manidhar Edhir paarthu pozhaikkanum Namma edhir paarthu pozhaikkanum Male : Udumbu pola urudhi venum Onaan nilaimai thirundhanum Odanji pona namadhu inam Onnaa vandhu porundhanum Male : Thandhanatthaanae Yaelaelo…oohhooo Thandhanatthaanae Yaelaelo Male : Odhuvaar thozhuvaarellaam Uzhuvaar thalai kadaiyilae Ulagham sezhippadhellaam Yaer nadakkum nadaiyilae Male : Aadhimagal avvai sollai Alasi paarthaa manasilae Aadhimagal avvai sollai Alasi paartthaa manasilae Male : Needhi endra nel vilaiyum Nerinji padarndha tharisilae Male : Podu thandhanatthaanae Yaelaelo Thandhanatthaanae Yaelaelo Male : {Vidhiyai enni Vizhundhu kidakkum Veenarellaam maaranum Velai senjaa uyarvomendra Vibaram mandaiyil yeranum} (2) Male : Nidhiyai ennum periyavanga Nenjil anbum saeranum…mmm Nirandharamaa sagalarumae Sodhandhiramaa vaazhanum Male : Ohooo…Ohoooo…Ohooo…Oohoo… Thandhanatthaanae…yaelaelo… Thandhanatthaanae…yaelaelo…
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : ஏற்றமுன்னா ஏற்றம் ஆ ஆஆ ஆஆ ஆஆ இதிலே இருக்குது முன்னேற்றம் ஆண் : எல்லாரும் பாடுபட்டா ஆஆ ஆஆ ஆஆ இது இன்பம் விளையும் தோட்டம் எல்லாரும் பாடுபட்டா இது இன்பம் விளையும் தோட்டம் ஆண் : கிணத்து நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம் கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம் ஆண் : தந்தனத் தானே ஏலேலோ தந்தனத் தானே ஏலேலோ ஆண் : எறும்பு போல வரிசையாக எதிலும் சேர்ந்து உழைக்கணும் இடுப்பே வளையா மனிதர் எதிர் பார்த்து பொழைக்கணும் நம்ம எதிர் பார்த்து பொழைக்கணும் ஆண் : உடும்பு போல உறுதிவேணும் ஓணான் நிலைமை திருந்தணும் உடைஞ்சு போன நமது இனம் ஒன்னா வந்து பொருந்தணும் ஆண் : தந்தனத் தானே ஏலேலோ ஓஹோ தந்தனத் தானே ஏலேலோ ஆண் : ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே ஆண் : ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாா்த்தா மனசிலே ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாா்த்தா மனசிலே ஆண் : நீதிஎன்ற நெல் விளையும் நெருஞ்சி படர்ந்த தரிசிலே ஆண் : போடு தந்தனத் தானே ஏலேலோ தந்தனத் தானே ஏலேலோ ஆண் : { விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும் வேலை செஞ்சா உயர்வோமென்ற விபரம் மண்டையில் ஏறனும் } (2) ஆண் : நிதியை எண்ணும் பெரியவங்க நெஞ்சில் அன்பும் சேரணும்… நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ தந்தனத் தானே ஏலேலோ தந்தனத் தானே ஏலேலோ