← Back

Merku Thodarchi Malai Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Anthony Daasan Male : {Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum …} (2) Male : {Maasam oruvaatti Naan vadugapatti pogaatti Valadhu kai neetti Naan malaiyoda pesaatti …} (2) Male : Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum … Male : Vaigai nadhimela en Valadhu kai nanaikkaama Vaigaiyila velayaadum Vaalameenu thoongaadhu Male : Poomarathu keezhae naan Pudhuppaattu ezhuthaama Poomarathil koodukattum Puraa irai kollaadhu Male : Kathaalangaadu Engaalsoodu kaangaama Kathaalam pudharoda Kaadai muttai podaadhu Male : Manjalaaru anaiyil naan Malaikaathu vaangaama Manjalaathu moolaiyilae Manikurivi meyaadhu Male : {Malaiyai konjam kadichukittae Koozh kudicha boomiyadaa Mannum malaiyum enga Paramabaraikkae saamiyadaa} (2) Male : Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum … Male : Kumabakarai saalaiyilae Komiya vaasam pudikkama Mandaikkulla mallukatti Malliapoo pookkaadhu Male : Kedaiyaattu mandhaiyila Kedaa koothu kaangaama Kaanjupona pozhappukulla Karpanaiyae kelambaadhu Male : Saathisanam pesum Mozhi sangeetham kelaama Idhigaasa ezhuthukku Sagavaasam irukkaadhu Male : Suttameen kavuchi Vandhu surrunnu yeraama Enseer viruthathil Ezhaancheeru vaaraadhu Male : {Malaiyai konjam kadichukittae Koozh kudicha boomiyadaa Mannum malaiyum enga Paramabaraikkae saamiyadaa} (2) Male : Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum … Male : Maasam oruvaatti Naan vadugapatti pogaatti Valadhu kai neetti Naan malaiyoda pesaatti … Male : Merku thodarchi malai Ilaichu pogum Andha megaathu melmoochu Vaangi pogum …
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : {மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ..} (2) ஆண் : {மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி…} (2) ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ஆண் : வைகை நதிமேல என் வலதுகை நனைக்காம வைகையில வெளையாடும் வாளமீனு தூங்காது ஆண் : பூமரத்துக் கீழே நான் புதுப்பாட்டு எழுதாம பூமரத்தில் கூடுகட்டும் புறா இரை கொள்ளாது ஆண் : கத்தாழங் காடு எங்கால்சூடு காங்காமக் கத்தாழம் புதரோட காடைமுட்டை போடாது ஆண் : மஞ்சளாறு அணையில் நான் மலைக்காத்து வாங்காம மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது ஆண் : {மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா} (2) ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ஆண் : கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம மண்டக்குள்ள மல்லுக்கட்டி மல்லியப்பூ பூக்காது ஆண் : கெடையாட்டு மந்தையில கெடாக் கூத்துக் காங்காம காஞ்சுபோன பொழப்புக்குள்ள கற்பனையே கெளம்பாது ஆண் : சாதிசனம் பேசும் மொழி சங்கீதம் கேளாம இதிகாச எழுத்துக்கு சகவாசம் இருக்காது ஆண் : சுட்ட மீன் கவுச்சி வந்து சுர்ருன்னு ஏறாம எண்சீர் விருத்தத்தில் ஏழாஞ்சீரு வாராது ஆண் : {மலையைக் கொஞ்சம் கடிச்சுக்கிட்டே கூழ்குடிச்ச பூமியடா மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா} (2) ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும் ஆண் : மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும் அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்