← Back

Nenjankuzhi Version 2 Song Lyrics

Singers : Karthik and Pooja Vaidyanath Music by : Prem Kumar Male : Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi…. Male : Unnenappu ongudhadi Ullusuru nogudhadi Kanneer pattu kannam rendum Valikudhadi… Male : Unna vittu naan pirinjaa Vazhaka aththu pogum – azhagae Kanna vittu nee maranjaa Paarva seththu pogum… Male : Nitham unna enni enni Neram vaththi pogum- adiyae Suttu viral neendu neendu Dhooram seththu pogum Male : {Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu} (2) Female : Ahaaa…aaaaa….. Male : Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi….ee..eee…ee… Male : Adikkura kaatha niruthi Vaaya pudunga paarpen Vanna vanna siru paravaiga pona Unna pathi ketpen Male : Adi nee angae engo nadakka Adi ingae ennilam thudikka Nee mannil kanneer vadikka Adhu vinnai sendru nanaikka Nee thaeda…. naan vaada…. Male : Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu Male : Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi ….. Female : Ahaa….aaaa…aaa…ahhaa.. Aaa…aa…aa…aa…ahaa..ahaa..ahaa… Male : Chinnanjiru theevukulla Jenmam tholayalaamaaa Ennai erichi oru theepandham Koluthi iruppa kaatalaama Male : Adi enna nenjil nenachi Un moochu kaatha iluthu Adhai ingae ingae anuppu Adhil endhan jeevan irukku Nee angae naan ingae Female : {Ada unmel konda kirukku En usurukkulla irukku Nee varuvaai ennum nenapil En vazhka thothi kidakku…} (2)
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத் இசை அமைப்பாளர் : பிரேம் குமார் ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி உள் உசுரு நோகுதடி கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும் அழகே கண்ண விட்டு நீ மறஞ்சா பார்வை செத்து போகும் ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்திப் போகும் அடியே சுட்டு விரல் நீண்டு நீண்டு தூரம் செத்து போகும் ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு } (2) பெண் : ஆஹா….ஆஆ… ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன் வண்ண வண்ண சிறு பறவைக போனா உன்ன பத்தி கேப்பேன் ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க அடி இங்கே என் நிலம் துடிக்க நீ மண்ணில் கண்ணீர் வடிக்க அது விண்ணைச் சென்று நனைக்க நீ தேட நான் வாட ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி பெண் : ………………………………………. ஆண் : சின்னஞ்சிறு தீவுக்குள்ள ஜென்மம் தொலயலாமா என்னை எரிச்சி ஒரு தீபந்தம் கொழுத்தி இருப்ப காட்டலாமா ஆண் : அடி என்ன நெஞ்சில் நெனச்சி உன் மூச்சு காத்த இழுத்து அதை இங்கே இங்கே அனுப்பு அதில் எந்தன் ஜீவன் இருக்கு நீ அங்கே நான் இங்கே பெண் : {அட உன்மேல் கொண்ட கிறுக்கு என் உசுருகுள்ள இருக்கு நீ வருவாய் என்னும் நெனப்பில் என் வாழ்க்கை தொத்தி கெடக்கு} (2)