← Back

Atrai Thingal Song Lyrics

Singers : Madhu Balakrishnan and Sujatha Music by : Vidyasagar Female : Attrai thingal vaanidam Male : Alli chendo neeridam Female : Suttrum thendral poovidam Male : Sokkum raagam yaazhidam Female : Kaanugindra kaathal ennidam Male : Naan thedugindra yaavum unnidam Male : Attrai thingal vaanidam Female : Alli chendo neeridam Male : Suttrum thendral poovidam Female : Sokkum raagam yaazhidam Male : Kaanugindra kaathal ennidam Female : Naan thedugindra yaavum unnidam Female : Adi thoda mudi thoda Aasai perugida Naerum pala vitha paribaashai Male : Podi pada podi pada Naanam podi pada Ketkkum manathinil uyir osai Female : Mudi thoda mugam thoda Mogam muzhigida Verkkum muthuginil ithihaasam Male : Urugida urugida Yekkam urugida Koodum anal ithu kulir veesum Female : Kulunginen udal koosida Kiranginen viral neenthida Male : Mayanginen sugam sernthida Thalumbinen enai nee thoda Paaynthida aayinthida Female : Kaanugindra kaathal ennidam Male : Naan thedugindra yaavum unnidam Male : Attrai thingal vaanidam Female : Alli chendo neeridam Male : Suttrum thendral poovidam Female : Sokkum raagam yaazhidam Male : Udal ethu udai ethu Thedum nilai ithu Kaathal kadan ithu adaiyaathu Female : Iravu ithu pagal ithu Thedum sugam ithu Saagum varaiyilum mudiyaathu Male : Kanavethu ninaivethu Ketkkum pozhuthithu Kaama pasi thaan adangaathu Female : Valam ithu idam ithu Vaattum kathai ithu Theendum varayilum vilangaathu Male : Nadungalaam kulir vaadaiyil Adangalaam oru aadaiyil Female : Thayangalaam idaivelaiyil Urangalaam athikaalaiyil Koodalil oodalil Male : Kaanugindra kaathal ennidam Female : Naan thedugindra yaavum unnidam
பாடகர்கள் : மதுபாலகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : அற்றைத் திங்கள் வானிடம் ஆண் : அல்லிச் செண்டோ நீரிடம் பெண் : சுற்றும் தென்றல் பூவிடம் ஆண் : சொக்கும் ராகம் யாழிடம் பெண் : காணுகின்ற காதல் என்னிடம் ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் ஆண் : அற்றைத் திங்கள் வானிடம் பெண் : அல்லிச் செண்டோ நீரிடம் ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம் பெண் : சொக்கும் ராகம் யாழிடம் ஆண் : காணுகின்ற காதல் என்னிடம் பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் பெண் : அடிதொட முடிதொட ஆசை பெருகிட நேரும் பலவித பரிபாஷை ஆண் : பொடிபட பொடிபட நாணம் பொடிபட கேட்கும் மனதினில் உயிரோசை பெண் : முடிதொட முகந்தொட மோகம் முழுகிட வேர்க்கும் முதுகினில் இதிகாசம் ஆண் : உருகிடஉருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது குளிர்வீசும் பெண் : குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் நீந்திட ஆண் : மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட பெண் : காணுகின்ற காதல் என்னிடம் ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் ஆண் : அற்றைத் திங்கள் வானிடம் பெண் : அல்லிச் செண்டோ நீரிடம் ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம் பெண் : சொக்கும் ராகம் யாழிடம் ஆண் : உடலெது உடையெது தேடும் நிலையிது காதல் கடனிது அடையாது பெண் : இரவெது பகலெது தேடும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது ஆண் : கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது காமப் பசி இதுஅடங்காது பெண் : வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விளங்காது ஆண் : நடுங்கலாம் குளிர்வாடையில் அடங்கலாம் ஒரு ஆடையில் பெண் : தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில் ஆண் : காணுகின்ற காதல் என்னிடம் பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்