← Back

Mudhal Mudhal Female Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Bharathwaj Female : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Enakullae indru puthu vitha modhal Ithan peyar thana ulagathil kaadhal Female : Naan swasitha kaatrinai Nesithu ne athai swasika vendumada Enathu peyarukae unnai eluthi thanthidu Enathu marbinil thinamum thunga vanthidu Female : Oh muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Female : Megam mattum suvaragum Kuliyal araiyai naan ketppen Unathu kangal mattum kana Chinna thuvaram athil vaippen Female : Nootriettu vinmeenai Ondru serthu nee kattu Enthan kalil golusu pola Katti vittu thalattu Female : Ada mayilin iragaal seitha Oru kalani nanum ketppen Ada iravinil odaa kadigaram thaan Veetil vendumae Female : Ennai kettu than neeyum Moochu vidanumae Kettidamalae ennai neeyum thodanumae Female : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Chorus : ………………………….. Female : Velai neram nee sendral Moga neram naan kondal Otrai mudiyil katti veippen Veliyil poga kudaathu Female : Chinna chinna muthathai Samaithu naanum tharuvenae Vetkam thottu koocham thottu Mutha unavu thinbom vaa Female : Ada ennai nuryai alli Poo methai seya solli Naan pothum pothum ennum Varayil mogam vendumae Female : Meesai kuthiyae Aasai kayam seiyadaa Inba kayathil neeyum Echil thadavava Female : Haan muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோதல் இதன் பெயர் தானா உலகத்தில் காதல் பெண் : நான் சுவாசித்த காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டுமடா எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு பெண் : ஓ முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை பெண் : மேகம் மட்டும் சுவராகும் குளியல் அறையை நான் கேட்பேன் உனது கண்கள் மட்டும் காண சின்ன துவாரம் அதில் வைப்பேன் பெண் : நூற்றி எட்டு விண்மீனை ஒன்று சேர்த்து நீ கட்டு எந்தன் காலில் கொலுசு போல கட்டி விட்டு தாலாட்டு பெண் : அட மயிலின் இறகால் செய்த ஒரு காலணி நானும் கேட்பேன் அட இரவினில் ஓட கடிகாரம் தான் வீட்டில் வேண்டுமே பெண் : என்னை கேட்டு தான் நீயும் மூச்சு விடணுமே கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை குழு : ………………….. பெண் : வேலை நேரம் நீ சென்றால் மோக நேரம் நான் கொண்டால் ஒற்றை முடியில் கட்டி வைப்பேன் வெளியில் போக கூடாது பெண் : சின்ன சின்ன முத்தத்தை சமைத்து நானும் தருவேனே வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு முத்த உணவு தின்போம் வா பெண் : அட எண்ணை நுரையை அள்ளி பூ மெத்தை செய்ய சொல்லி நான் போதும் போதும் என்னும் வரையில் மோகம் வேண்டுமே பெண் : மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவவா பெண் : ஹான் முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை