← Back

Kaalangale Kann Paarungal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Male : Kaalangalae kann paarungal Kavalai kanneer oru puram Kadhal sugangal maru puram Veliyittu nirppathenna kaalangalae Male : Idhu aayiram malargalin thottam Idhil aasaiyil aadidum kottam Idhu aayiram malargalin thottam Idhil aasaiyil aadidum kottam Ingu naalukku naal oru aattam Idhu nadakkum varai mana vaattam Male : Kaalangalae kann paarungal Male : Aadaatha thogai isai paadatha kuyil Poovaatha pushpam mazhai pozhiyaatha megam Veenaiyundu thanthiyillai Koyilundu vaasalillai Yaaritta saabam yaarukku laabam Male : Tamarai poovil vandaadum kolam Malarnthathaanal vantha kadhal Maathargal vaazhkkai malaruvathendraal Kaalaththil thirakkanum vaasal Male : Thaedi kuriththu oru paruvam varuvatharkku Iraivan arul vendum Thalaivan thunai vendum Thennangkeettril oru thendral thazhuvi vara Kaalam vara vendum Karunai thara vendum…. Male : Kaalangalae kann paarungal Male : Ilamai enbathu oru thanaiyaatha veri Adhu arivin kaaichal Ananthathin marana padukkai Male : Ilamaiyilae oru sanniyaasi kolam varuvathu Iraivanin leelai Ezhilmigu penmai malaraathirunthaal Eppadi varum manamaalai Male : Thaayin manathil oru sanjalam vanthathu Aaruthal adaiyaathu anantham kidaiyaathu Magalin vaazhvil oru mangalam illai Thaaimai adaiyaathu thanimai tholaiyaathu Male : Kaalangalae kann paarungal Male : Idhu aayiram malargalin thottam Idhil aasaiyil aadidum kottam Ingu naalukku naal oru aattam Idhu nadakkum varai mana vaattam Male : Kaalangalae…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காலங்களே கண் பாருங்கள் கவலை கண்ணீர் ஒரு புறம் காதல் சுகங்கள் மறு புறம் வேலியிட்டு நிற்பதென்ன காலங்களே…… ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம் இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம் இது ஆயிரம் மலர்களின் தோட்டம் இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம் இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம் இது நடக்கும் வரை மன வாட்டம் …. ஆண் : காலங்களே கண் பாருங்கள் ஆண் : ஆடாத தோகை இசை பாடாத குயில் பூவாத புஷ்பம் மழை பொழியாத மேகம் வீணையுண்டு தந்தியில்லை கோயிலுண்டு வாசலில்லை யாரிட்ட சாபம் யாருக்கு லாபம்….. ஆண் : தாமரைப் பூவில் வண்டாடும் கோலம் மலர்ந்ததனால் வந்த காதல் மாதர்கள் வாழ்க்கை மலருவதென்றால் காலத்தில் திறக்கணும் வாசல் ஆண் : தேதி குறித்து ஒரு பருவம் வருவதற்கு இறைவன் அருள் வேண்டும் தலைவன் துணை வேண்டும் தென்னங்கீற்றில் ஒரு தென்றல் தழுவி வர காலம் வர வேண்டும் கருணை தர வேண்டும்… ஆண் : காலங்களே கண் பாருங்கள் ஆண் : இளமை என்பது ஒரு தணியாத வெறி அது அறிவின் காய்ச்சல் ஆனந்தத்தின் மரணப் படுக்கை ஆண் : இளமையிலே ஒரு சந்நியாசி கோலம் வருவது இறைவனின் லீலை எழில்மிகு பெண்மை மலராதிருந்தால் எப்படி வரும் மணமாலை ஆண் : தாயின் மனதில் ஒரு சஞ்சலம் வந்தது ஆறுதல் அடையாது ஆனந்தம் கிடையாது மகளின் வாழ்வில் ஒரு மங்கலம் இல்லை தாய்மை அடையாது தனிமை தொலையாது ஆண் : காலங்களே கண் பாருங்கள் ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம் இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம் இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம் இது நடக்கும் வரை மன வாட்டம்…… ஆண் : காலங்களே……