← Back

Enge Irunthai Isaiye Song Lyrics

Singers : K. J. Yesudas and Manjari Music by : Ilayaraja Male : Engae irundhaai isaiyae… Male : Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai Male : Engae irundhaai isaiyae Male : Kaatril kalappadhaal Nee kaatrin vadivamaa sol Oliyaai udhippadhaal Nee oliyin uruvamaa sol Uruvam yaedhum illaamal Ulagai eerppaayae Ulagin uyirgal unnidathil Ullam izhappaarae Male : Isaiyil mayangaa uyir yaedhu Mazhaiyil vilaiyaa payir yaedhu Idhu unakkum enakkum Poorva jenma bandham thaan Male : Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Female : Ethanai oorgalil Naam inaindhu paadi chendrom Ethanai sevigalil Thaen virundhu padaithu chendrom Paadhai illaa oorukkellaam Paattaal vazhi pottom Vaedhanai namakkul irundhaalum Paattaal thuyar theerthom Female : Isaiyai arindhida vizhi edharkku Inam thaan kandida sevi irukku Ingu paadum paadal Pazhaiya ninaivai kooraadho Female : Engae irundhaai isaiyae Male : Nee engae irundhaai isaiyae Female : Uyirilaa unarvilaa Male : Manadhilaa madhiyilaa Female : Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Male : Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai Both : Engae irundhaai… Male : Nee engae irundhaai…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் மஞ்சரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்கே இருந்தாய் இசையே……. ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய் ஆண் : எங்கே இருந்தாய் இசையே ஆண் : காற்றில் கலப்பதால் நீ காற்றின் வடிவமா சொல் ஒலியாய் உதிப்பதால் நீ ஒலியின் உருவமா சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை ஈர்ப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே ஆண் : இசையில் மயங்கா உயிர் ஏது மழையில் விளையா பயிர் ஏது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான் ஆண் : எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே பெண் : எத்தனை ஊர்களில் நாம் இணைந்து பாடிச் சென்றோம் எத்தனை செவிகளில் தேன் விருந்து படைத்துச் சென்றோம் பாதை இல்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழி போட்டோம் வேதனை நமக்குள் இருந்தாலும் பாட்டால் துயர் தீர்த்தோம் பெண் : இசையை அறிந்திட விழி எதற்கு இனம்தான் கண்டிட செவி இருக்கு இங்கு பாடும் பாடல் பழையை நினைவைக் கூறாதோ பெண் : எங்கே இருந்தாய் இசையே ஆண் : நீ எங்கே இருந்தாய் இசையே பெண் : உயிரிலா உணர்விலா ஆண் : மனதிலா மதியிலா பெண் : இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் ஆண் : எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய் இருவர் : எங்கே இருந்தாய்… ஆண் : நீ எங்கே இருந்தாய்…