← Back

Theivam Illai Song Lyrics

Singer : Madhu Balakrishnan Music by : Yuvan Shankar Raja Male : Dheivam illai enumbothu Kovil edharkku Illai neeyum enumbothu Vaazhvae edharkku Male : Ithuvaraiyil edhai kettaalum Tharuvaayae manam konaamal Thuyaram naan ithai ketkaamal Koduthayae edharkaaga Male : Dheivam illai enumbothu Kovil edharkku Illai neeyum enumbothu Vaazhvae edharkku Male : Oru naal enai pirinthaalum Vaadiya mugamae unai Ini engu paarpathu oh.. Enathaasaigal niraivera yengiya Manamae unai Edhai thanthu meetpathu Male : Azhuthida koodaathendru Arivurai kooruvaai Azhugaiyai neeyae thanthu ponaayae Urangida neram indri Uzhaithidum kangalae Niranthara thookkam enna aazhnthaayae Male : Dheivam illai enumbothu Kovil edharkku Male : Uyir vaazhvathae Enakkaaga endru nee Dhinam pesuvaai adhu enna aanathu oh.. Thalai mel sumai Irunthaalum punnagai tharumae idhazh Adhu engu ponathu Male : Nadanthida paatham thanthu Vazhigalai kaattinaai Naduvinil mundhi sendraal en seiven Ethu ethu illai endru Enakkena vaanguvaai Iruthiyil neeyae illai en solven Male : Dheivam illai enumbothu Kovil edharkku Illai neeyum enumbothu Vaazhvae edharkku
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு ஆண் : இதுவரையில் எதைக் கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல் துயரம் நான் இதை கேட்காமல் கொடுத்தாயே எதற்காக ஆண் : தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு ஆண் : ஒரு நாள் எனைப் பிரிந்தாலும் வாடிய முகமே உனை இனி எங்கு பார்ப்பது ஒ .. எனதாசைகள் நிறைவேற ஏங்கிய மனமே உன்னை எதை தந்து மீட்பது ஆண் : அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய் அழுகையை நீயே தந்து போனாயே உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே ஆண் : தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு ஆண் : உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய் அது என்ன ஆனது ஒ.. தலை மேல் சுமை இருந்தாலும் புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது ஆண் : நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய் நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன் எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய் இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன் ஆண் : தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு