← Back

En Kannai Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Male : En kannai pidungikol..pennae Ennai kaadhal kurudan aakkividu Unnai mattum kandukolla Oru seyarkkai kannai poruthividu Male : Yaanai thadavum Kurudan kathai pola Haiyo haiyo Thadavi thadavai Unnai paarpenae Hai hai hai haiyoo… Male : Sirppam pola intha udal Naan thottu paarthathum kulaigirathae Engae engae unthan idai Thottu paarthum kooda Adhu kidaikkallaiyae Male : Ohh… kodi kodiyaai penn kootam Kadanthu poivarum veedhiyilae Idhayam unakku munnaal padutthu Mariyal pannuthae Male : Koonthal saattaiyai suzhatrugiraai Kanneer gundugal veesugiraai Unathu imsai inbam inbam Endrae thonuthae Male : Alagennum visham yeruthae Unthan kannaalae Visham kooda amuthaaguthae Pennae…Unthan kaadhalaalae Male : Vaa vaa vaa…vanthu theendividu En kannai pidungikol…pennae En kannai pidungikol…pennae Female : Oohoo…ooooo….Ohooo…oooo… Male : Kaadhal enbathu vannmuraiyaa Kanngalthaan athan seimuraiyaa Kanngal rendum urasumbodhu Idhayam yeriyuthae Male : Pennmai enbathu yerimalaiyaa Poovil sinthidum panimazhaiyaa Irumbu nenjam poovin kaambaai Konjam valaiyuthae Male : Manam indru bommai aanathae Pennae unnaalae Konji konji thalaiyai aattuthae Unnai kandu aasaiyaalae Male : Vaa vaa vaa…vanthu vilaiyaadu En kannai pidungikol…pennae Ennai kaadhal kurudan aakkividu Unnai mattum kandukolla Oru seyarkkai kannai poruthividu Male : Yaanai thadavum Kurudan kathai pola Haiyo haiyo Thadavi thadavai Unnai paarpenae Hai hai hai hai… Female : Oohoo…ooooo….Ohooo…oooo…
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே என்னை காதல் குருடன் ஆக்கிவிடு உன்னை மட்டும் கண்டுகொள்ள ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு ஆண் : யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹை ஹை ஹை ஹையோ ஆண் : சிற்பம் போல இந்த உடல் நான் தொட்டு பார்த்ததும் குலைகிறதே எங்கே எங்கே உந்தன் இடை தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கலையே ஆண் : ஓ கோடி கோடியாய் பெண் கூட்டம் கடந்து போய்வரும் வீதியிலே இதயம் உனக்கு முன்னால் படுத்து மறியல் பண்ணுதே ஆண் : கூந்தல் சாட்டையை சுழற்றுகிறாய் கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய் உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோணுதே ஆண் : அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே விஷம் கூட அமுதாகுதே பெண்ணே உந்தன் காதலாலே ஆண் : வா வா வா வந்து தீண்டிவிடு என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே என் கண்ணை பிடுங்கி கொள் பெண்ணே பெண் : ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ ஆண் : காதல் என்பது வன்முறையா கண்கள்தான் அதன் செய்முறையா கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே ஆண் : பெண்மை என்பது எரிமலையா பூவில் சிந்திடும் பனிமழையா இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வலையுதே ஆண் : மனம் இன்று பொம்மை ஆனதே பெண்ணே உன்னாலே கொஞ்சி கொஞ்சி தலையை ஆட்டுதே உன்னை கண்டு ஆசையாலே ஆண் : வா வா வா வந்து விளையாடு என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே என்னை காதல் குருடன் ஆக்கிவிடு உன்னை மட்டும் கண்டுகொள்ள ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு ஆண் : யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹை ஹை ஹை ஹை பெண் : ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ