← Back

Kannamoochi Yenada Song Lyrics

Singers : K. S. Chithra and Shahana Music by : A. R. Rahman Female : Kannamoochi yenada Kannamoochi yenada En kannaa Female : {Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada} (2) Female : {Andha nadhiyin karaiyai Naan ketten. Andha kaatrai niruthiyum Ketten} (2) Female : {Vaan veliyai ketten Vidaiyae illai (2) {Irudhiyil unnai kanden Irudhaya poovil kanden }(2) Female : Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada…aaa…. Female : {En manam unakkoru Vilaiyaattu bommaiyaa }(2) Enakkena unarchigal Thaniyaaga illaiyaa Nenjin alai urangaadhu Female : Un idhazh kondu Vaai mooda vaa En kannaa…aaaa..aaa… Female : Un idhazh kondu Vaai mooda vaa En kannaa.. Un imai kondu Vizhi mooda vaa Un udal thaan En udai allavaa Female : {Paarkadalil aadiya pinnum Un vannam maaravillai innum} (2) Female : En nenjil koodiyae Niram maaravaa Ennuyiril nee vandhu serga Udhadugal eeramaai vazhga Kalandhidavaa…aaaa….. Female : Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada Female : {Vaan mazhai vizhumpodhu Malai kondu kaathaai}(2) Kan mazhai vizhum podhu Edhil ennai kaappaai Poovin kanneerai rasippaai Female : Naan enna pennilaiyaa… En kannaa Adhai nee kaana kannillaiyaa Un kanavugalil naan illaiyaa Female : Dhinam oosal aaduthu manasu Ada oomai alla en kolusu En ullmoochilae uyir neengudhae Ennuyir thudikkaamalae Kaappadhu un theendalae Uyir thara vaa… Female : Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada…aa…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சஹானா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பெண் : கண்ணாமூச்சி ஏனடா கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா பெண் : {கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2) பெண் : {அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்} (2) பெண் : {வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை} (2) {இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்} (2) பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா….. பெண் : {என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா} (2) எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா நெஞ்சின் அலை உறங்காது பெண் : உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ…. உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா உன் இமை கொண்டு விழி மூட வா உன் உடல்தான் என் உடையல்லவா பெண் : {பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2) பெண் : என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா…. பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா பெண் : {வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்} (2) கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய் பூவின் கண்ணீரை ரசிப்பாய் பெண் : நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா உன் கணவுகளில் நானில்லையா பெண் : தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே உயிர் தர வா…… பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா…