← Back

Iruthalai Kolli Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vairamuthu Male : Hae ye ye Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Male : Thannai thaanae Malaiyil eriyum Sooriyanai polae Naanae ennai Erindhu kondaen Nachellaik kullae Male : Malaiyil vizhundha sooriyanai Malaigal thalluvadhillai Allik kolluvaayo Thallich selvaayo Solli chelladi nachellai Male : Theda sellum Male : Hae Pattaamboochidhaan kaadhal Kitta chella thathi thaavum Thuratha thuratha dhooram pogum Male : Hae Chalavaikkaari pol kaadhal Inbathil ennai nanaikkiradhae Thunbathil adithu thuvaikkiradhae Male : Thanadhu nizhalil Thaan odhungaadha Virutcham polae Enadhu kaadhalil Naan odhungavae idamillaiyae Aiyo kaadhal Amazon kaadu Ullae nuzhaivadhu elidhu Veliyae varuvadhu kadidhu Male : Hae hae hae Kaathiruppudhaan kaadhal Pipravari muppadhukkaaga Natchathirangalin virpanaikkaaga Male : Eekkal ponradhu kaadhal Kaniyilum vaayai vaikkiradhae Kaayathin meedhum moikkiradhae Male : Kaatru veliyin Ozone koorai kizhisal polae Kaadhal kizhitha Idhayam thaikkavae vazhiyillaiyae Aiyo kaadhal Amazon kaadu Ullae nuzhaivadhu elidhu Veliyae varuvadhu kadidhu Male : Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Male : Thannai thaanae Malaiyil eriyum Sooriyanai polae Naanae ennai Erindhu kondaen Nachellaik kullae Male : Malaiyil vizhundha sooriyanai Malaigal thalluvadhillai Allik kolluvaayo Thallich selvaayo Solli chelladi nachellai Male : Theda sellum
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : ஹே ஏய் ஏய்… இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! ஆண் : தன்னைத் தானே மலையில் எறியும் சூரியனைப் போலே நானே என்னை எறிந்து கொண்டேன் நச்செள்ளைக் குள்ளே ஆண் : மலையில் விழுந்த சூரியனை மலைகள் தள்ளுவதில்லை அள்ளிக் கொள்ளுவாயோ தள்ளிச் செல்வாயோ சொல்லிச் செல்லடி நச்செள்ளை ஆண் : தேட செல்லும் … ஆண் : ஹே பட்டாம்பூச்சிதான் காதல் கிட்டச் செல்ல தத்தித் தாவும் துரத்தத் துரத்த தூரம் போகும் ஹே ஹே தூரம் போகும் ஆண் : ஹே சலவைக்காரி போல் காதல் இன்பத்தில் என்னை நனைக்கிறதே துன்பத்தில் அடித்துத் துவைக்கிறதே ஆண் : தனது நிழலில் தான் ஒதுங்காத விருட்சம்போலே எனது காதலில் நான் ஒதுங்கவே இடமில்லையே அய்யோ காதல் அமேசான் காடு உள்ளே நுழைவது எளிது வெளியே வருவது கடிது ஆண் : ஹே ஹே ஹே காத்திருப்புதான் காதல் பிப்ரவரி முப்பதுக்காக நட்சத்திரங்களின் விற்பனைக்காக ஆண் : ஈக்கள் போன்றது காதல் கனியிலும் வாயை வைக்கிறதே காயத்தின் மீதும் மொய்க்கிறதே ஆண் : காற்று வெளியின் ஓசோன் கூரைக் கிழிசல் போலே காதல் கிழித்த இதயம் தைக்கவே வழியில்லையே அய்யோ காதல் அமேசான் காடு உள்ளே நுழைவது எளிது வெளியே வருவது கடிது ஆண் : இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! ஆண் : தன்னைத் தானே மலையில் எறியும் சூரியனைப் போலே நானே என்னை எறிந்து கொண்டேன் நச்செள்ளைக் குள்ளே ஆண் : மலையில் விழுந்த சூரியனை மலைகள் தள்ளுவதில்லை அள்ளிக் கொள்ளுவாயோ தள்ளிச் செல்வாயோ சொல்லிச் செல்லடி நச்செள்ளை ஆண் : தேட செல்லும் …