← Back

Engeyo Pogum Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : Justin Prabhakaran Female : Aaararo…aaararo…aaararo… Chorus : Ooooo..ooooo..ohoooo..oooo Male : Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae Male : Ini enna nerum Vaazhkaiku inghae Vidai solvaar yaaro Iru jeevan yenguthae Male : Veyilukku nizhalaaga Mazhai peithal kudaiyaaga Yaar vanthu nammai servaaro Chorus : Thol sainthu kolla Oru thunai endru solla Intha bantham mattum Pakkam ullathae… Chorus : Ethirpaarppu illa Siru yemaatram illa Oru payanam ponaal Deivam ullathae Male : Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae Female : {Aaararo…Male : Aaararo…} (2) Male : Ullangkaal regai pola Ottiyae vaazhum intha Uravukku aayul ennavo… Male : Kallukkul sirpam pola Kannukkul theppam pola Natpukkul karpam ullatho Male : Kadavulgal boomikku Varukindra oru thethi Marakkaamal kelungal Ithai patri oru sethi Chorus : Nilai illa vaazhvil Ethu nilaiyaanathendru Ada yaar thaan ingae Nyayam solvaaro Chorus : Kaanal neer polae Dhinam kalainthodum vaazhvil Verum natpai kondu Vaazhvai velvaaro Male : Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae Chorus : Oooo..oooo..ooo Male : Yaarodu yaarum ingae Thunai poga nerum bothu Undaakum uravum ithu thaanae Male : Ezhuthatha vithigal endru Evar vandhu solvaar indru Ithu enna nizhala nijamthaanae Male : Kanneero punnagaiyo Ellamae sari paathi Yaar solli thanthaaro Azhagaana puthu neethi Male : Oru kodi sontham Athil pala kodi bantham Ivai ellam ingae Poiyaai ponathae Male : Ethu vantha pothum Nam natpondrae pothum Ena kangal moodi Payanam poguthae
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : ஆராரோ ஆராரோ ஆராரோ குழு : ஓஓஓஓ….. ஓஹோ ஓ ஆண் : எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே ஆண் : இனி என்ன நேரும் வாழ்க்கைக்கு இங்கே விடை சொல்வார் யாரோ இரு ஜீவன் ஏங்குதே ஆண் : வெயிலுக்கு நிழலாக மழை பெய்தால் குடையாக யார் வந்து நம்மை சேர்வாரோ குழு : தோள் சாய்ந்து கொள்ள ஒரு துணை என்று சொல்ல இந்த பந்தம் மட்டும் பக்கம் உள்ளதே குழு : எதிர்பார்ப்பு இல்ல சிறு ஏமாற்றம் இல்ல ஒரு பயணம் போனால் தெய்வம் உள்ளதே ஆண் : எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே பெண் : { ஆராரோ ஆண் : ஆராரோ } (2) ஆண் : உள்ளங்கால் ரேகை போல ஒட்டியே வாழும் இந்த உறவுக்கு ஆயுள் என்னவோ ஆண் : கல்லுக்குள் சிற்பம் போல கண்ணுக்குள் தெப்பம் போல நட்புக்குள் கர்ப்பம் உள்ளதோ ஆண் : கடவுள்கள் பூமிக்கு வருகின்ற ஒரு தேதி மறக்காமல் கேளுங்கள் இதை பற்றி ஒரு சேதி குழு : நிலை இல்லா வாழ்வில் எது நிலையானதென்று அட யார் தான் இங்கே நியாயம் சொல்வாரோ குழு : கானல் நீர் போலே தினம் கலைந்தோடும் வாழ்வில் வெறும் நட்பை கொண்டு வாழ்வை வெல்வாரோ ஆண் : எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே குழு : ஓஓஓஓ….. ஆண் : யாரோடு யாரும் இங்கே துணை போக நேரும் போது உண்டாகும் உறவும் இது தானே ஆண் : எழுதாத விதிகள் என்று எவர் வந்து சொல்வார் இன்று இது என்ன நிழலா நிஜம்தானே ஆண் : கண்ணீரோ புன்னகையோ எல்லாமே சரி பாதி யார் சொல்லி தந்தாரோ அழகான புது நீதி ஆண் : ஒரு கோடி சொந்தம் அதில் பல கோடி பந்தம் இவை எல்லாம் இங்கே பொய்யாய் போனதே ஆண் : எது வந்த போதும் நம் நட்பொன்றே போதும் என கண்கள் மூடி பயணம் போகுதே