← Back

Unakkoru Vishayam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Unakkoru vishayam therivikkavo Unakkoru vishayam therivikkavo Ha ullaththin aasaiyai arivikkavo Sollavo ennendru sollavo Oooooooh oooooooh Female : Pallaakku en maeni Pattaththu raja nee Pakkam vanthaadavo Pon manjam en nenjam Poongannam thaen kinnam Sontham kondaadavo vaa vaa Female : Unakkoru vishayam therivikkavo Ha ullaththin aasaiyai arivikkavo Sollavo ennendru sollavo Oooooooh oooooooh Female : En vaazhvukku neethaan vennilavu Male : Vennilavukku vaanamthaan uravu Female : Intha thaamarai poovithazh malaraatho Male : Antha sooriyan sudar vanthu thazhuvaatho Female : Udal kodhikkuthu kulirnthida vazhi sollu Male : Kulir nadhiyinil poe konjam neeraadu Female : Nee aasaiyillaatha aan magano Male : Un aasaikku kaaranam naanthaano Male : Unakkoru vishayam therivikkavo Ha ullaththin aasaiyai arivikkavo Sollavo ennendru sollavo Oooooooh Male : Maanikkam vaidooriyam aanipon Ellaam un angam endraanatho Pavalaththin pettikkul thavazhum nal muththukkal Parkkal endraanatho Male : Intha maivizhi pandiyan meen kodiyo Female : Ilam meen vanthu mugaththinil mithappathundo Male : Intha puruvangal serananin vil kodiyo Female : Idhai veerargal kaigalil valaippathundo Male : Un ezhil nadai sozhanin pulikkodiyo Female : En inaththaval puliyaiyum virattalaiyo Male : Nee aasaiyillaatha penn magalo Female : Un aasaikku kaaranam en azhago Male : Unakkoru vishayam therivikkavo Female : Ha ullaththin aasaiyai arivikkavo Both : Sollavo ennendru sollavo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ் பெண் : பல்லாக்கு என் மேனி பட்டத்து ராஜா நீ பக்கம் வந்தாடவோ பொன் மஞ்சம் என் நெஞ்சம் பூங்கன்னம் தேன் கிண்ணம் சொந்தம் கொண்டாடவோ வா வா பெண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓஓஓஓஹ் ஓஓஓஓஓஓஹ் பெண் : என் வாழ்வுக்கு நீதான் வெண்ணிலவு ஆண் : வெண்ணிலவுக்கு வானம்தான் உறவு பெண் : இந்த தாமரை பூவிதழ் மலராதோ ஆண் : அந்த சூரியன் சுடர் வந்து தழுவாதோ பெண் : உடல் கொதிக்குது குளிர்ந்திட வழி சொல்லு ஆண் : குளிர் நதியினில் போய் கொஞ்சம் நீராடு பெண் : நீ ஆசையில்லாத ஆண் மகனோ ஆண் : உன் ஆசைக்கு காரணம் நான்தானோ ஆண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ சொல்லவோ என்னென்று சொல்லவோ ஓஓஓஓஓஓஹ் ஆண் : மாணிக்கம் வைடூர்யம் ஆணிப்பொன் எல்லாம் உன் அங்கம் என்றானதோ பவளத்தின் பெட்டிக்குள் தவழும் நல்முத்துக்கள் பற்கள் என்றானதோ ஆண் : இந்த மைவிழி பாண்டியன் மீன் கொடியோ பெண் : இளம் மீன் வந்து முகத்தினில் மிதப்பதுண்டோ ஆண் : இந்த புருவங்கள் சேரனின் வில் கொடியோ பெண் : இதை வீரர்கள் கைகளில் வளைப்பதுண்டோ ஆண் : உன் எழில்நடை சோழனின் புலிக்கொடியோ பெண் : என் இனத்தவள் புலியையும் விரட்டலையோ ஆண் : நீ ஆசையில்லாத பெண் மகளோ பெண் : உன் ஆசைக்கு காரணம் என் அழகோ ஆண் : உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ பெண் : ஹ உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ இருவர் : சொல்லவோ என்னென்று சொல்லவோ