← Back

Senthamizh Naadennum Song Lyrics

Singers : Udutha Sarojini and Chorus Music by : K. V. Mahadevan Female : Senthamizh naadennum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae Female Chorus : Senthamizh naadennum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae Female : Engal thandhaiyar naadennum pechinilae Oru sakthi pirakkudhu moochinilae Female Chorus : Engal thandhaiyar naadennum pechinilae Oru sakthi pirakkudhu moochinilae Female : Kaaviri then pannai paalaaru thamizh Kandadhor vaiyai porunai nadhi Female : Aa….aa….aa….aa….aa…aa….aa…aa.. Female Chorus : Kaaviri then pannai paalaaru thamizh Kandadhor vaiyai porunai nadhi Female : Yena maeviya aaru pala oda Thiru maeni sezhitha thamizhnaadu Female Chorus : Yena maeviya aaru pala oda Thiru maeni sezhitha thamizhnaadu Female : Valluvan thannai ulaginukkae thandhu Vaan pughazh konda thamizhnaadu Female Chorus : Valluvan thannai ulaginukkae thandhu Vaan pughazh konda thamizhnaadu Female : Nenjai allum silappadhigaaram endror Mani aaram padaitha thamizhnaadu Female Chorus : Nenjai allum silappadhigaaram endror Mani aaram padaitha thamizhnaadu Female : Neelaa thirai kadal orathilae nindru Nitham thavam sei kumari ellai Female : Aa….aa….aaa…..aa……aa…..aa…. Female Chorus : Neelaa thirai kadal orathilae nindru Nitham thavam sei kumari ellai Female : Vada maalavan kundram Ivattridaiyae Pugazh mandi kidakkum thamizhnaadu Female Chorus : Vada maalavan kundram Ivattridaiyae Pugazh mandi kidakkum thamizhnaadu Female : Pugazh mandi kidakkum thamizhnaadu All : Senthamizh naadennum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae Engal thandhaiyar naadennum pechinilae Oru sakthi pirakkudhu moochinilae Claps : ……………………….. All : {Senthamizh naadennum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae Engal thandhaiyar naadennum pechinilae Oru sakthi pirakkudhu moochinilae} (3)
பாடகர்கள் : உடுத்தா சரோஜினி மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே பெண் குழு : செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே பெண் : எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் குழு : எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி பெண் : ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….. பெண் குழு : காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி பெண் : என மேவிய ஆறு பலவோடத் திரு மேனி செழித்த தமிழ்நாடு….. பெண் குழு : என மேவிய ஆறு பலவோடத் திரு மேனி செழித்த தமிழ்நாடு….. பெண் : வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு பெண் குழு : வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு பெண் : நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு….. பெண் குழு : நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு….. பெண் : நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை பெண் : ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….. பெண் குழு : நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை பெண் : வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு பெண் : புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு அனைவரும் : செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே கைதட்டல்கள் : ……………………………… அனைவரும் : {செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே} (3)