← Back

Ninaithu Ninaithu Parthen Song Lyrics

Singer : K.K Music by : Yuvan Shankar Raja Male : Ninaithu ninaithu paarthen Nerungi vilagi nadandhen Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo…. Unnil indru ennai paarkkiren… Male : Eduthu padithu Mudikkum munnae Eriyum kadidham Edharku pennae Male : Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo…. Unnil indru ennai paarkkiren… Chorus : Mmmm…mmmm…mmm Mmmm…mmmm…mmm..mmm Male : Amarndhu pesum Marangalin nizhalum Unnai ketkum eppadi solven Udhirndhu pona malarin mounama..aa… Male : Thoodhu pesum Kolusin oliyai Araigal ketkum Eppadi solven Udaindhu pona Valaiyal pesuma..aaa… Male : Ullangaiyial Veppam serkkum Viralgal indru engae Thozhil saindhu Kadhaigal pesa Mugamum illai ingae Male : Mudhal kanavu Mudindhidum munnamae Thookkam kalaindhadhae Male : Ninaithu ninaithu paarthen Nerungi vilagi nadandhen Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo…. Unnil indru ennai paarkkiren… Male : Pesi pona Vaarthaigal ellaam Kaalam dhorum Kaadhinil ketkum Saambal karaiyum Vaarthai karaiyuma… Male : Paarthu pona Paarvaigal ellaam Pagalum iravum Kelvigal ketkum Uyirum pogum Uruvam poguma… Male : Thodarndhu vandha Nizhalum ingae Theeyil serndhu pogum Thiruttu pona Thadayam paarthum Nambavillai naanum Oru Tharunam Edhirinil thondruvaai Endrae vaazhgiren….
பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ஆண் : எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே ஆண் : உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ஆ ஆண் : தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ ஆண் : உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே ஆண் : முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே ஆண் : நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ஆண் : பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ஆண் : பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா ஆண் : தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்