← Back

Odam Ondru Kattril Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male : Odam ondru kaattril pona vazhi Naamum pogindrom Yaetho ondru naalai endru Innum vaazhgindrom Male : Odam ondru kaattril pona vazhi Naamum pogindrom Male : Paathai endru yaedhum illai Kaalam ellaam naangal pogindrom Thaagam vanthaal neerum illai Neeril ingae naalum vaazhgindrom Intha neeril sendrae kaanal neeraanom Male : Odam ondru kaattril pona vazhi Naamum pogindrom Male : Thoondil ittom meengal illai Naangal ingae thoondil meenaanom Odam vittom dheepam illai Naangal ingae odam polaanom Entha neram engae povom endraanom Male : Megam endraal minnal undu Thondrum minnalthaanae maaraathaa Vaazhkkai endraal innal undu Kaanum innal thaanae theeraathaa Nalla kaalam ondru naalai vaaraathaa Male : Odam ondru kaattril pona vazhi Naamum pogindrom
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஏதோ ஒன்று நாளை என்று இன்னும் வாழ்கின்றோம்…….. ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : பாதை என்று ஏதும் இல்லை காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம் தாகம் வந்தால் நீரும் இல்லை நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம் இந்த நீரில் சென்றே கானல் நீரானோம் ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம் ஓடம் விட்டோம் தீபம் இல்லை நாங்கள் இங்கே ஓடம் போலானோம் எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம் ஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு தோன்றும் மின்னல் தானே மாறாதா வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு காணும் இன்னல் தானே தீராதா நல்ல காலம் ஒன்று நாளை வாராதா ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம்